குமுதம் (இதழ்)

தமிழ் வார இதழ்

குமுதம் (Kumudam) தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது எஸ்.ஏ.பி. அண்ணாமலை மற்றும் அவரது நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமான பி.வி. பார்த்தசாரதி ஆகியோரால் 1948 இல் தொடங்கப்பட்டது.[1] குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 1986 இல் 620,000 பிரதிகள் புழக்கத்தில் இருந்தது.[2][3] 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.

குமுதம்
துறைபல்சுவை
மொழிதமிழ்
பொறுப்பாசிரியர்பிரியா கல்யாணராமன் (எ) ராமச்சந்திரன்
Publication details
பதிப்பகம்
குமுதம் பப்ளிகேசன்ஸ் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளிவார இதழ்
ISO 4Find out here
Links
  • [www.kumudam.com குமுதம் இணையப் பக்கம்]

சர்ச்சை

தொகு

செப்டம்பர் 2015 இல், குமுதம் ரிப்போர்ட்டர் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், "லெக்கிங்ஸ்" அணியும் பெண்களை விமர்சித்தபோது, குமுதம் விமர்சனத்திற்கு உள்ளானது. கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள பெண்களின் படங்கள் அனுமதியின்றி அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது.[4]

முக்கிய நபர்கள்

தொகு
  • நிறுவிய ஆசிரியர் - எஸ்.ஏ.பி. அண்ணாமலை
  • நிறுவிய பதிப்பாளர் - பி.வி.பார்த்தசாரதி
  • அச்சிட்டு வெளியிடுபவர் - பா.வரதராசன்
  • ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (எ) ராமசந்திரன்

சான்றுகள்

தொகு
  1. Latha Srinivasan (24 September 2015). "Now, a petition filed against Tamil magazine Kumudam Reporter for its 'obscene story' on leggings". Chennai. http://www.dnaindia.com/india/report-now-a-petition-filed-against-tamil-magazine-kumudam-reporter-for-its-obscene-story-on-leggings-2128186. 
  2. Hutchinson Encyclopedia 8th edition, 1988, p.745
  3. "Site Analytics". Archived from the original on 2017-03-01. Retrieved 2023-03-26.
  4. "Plea against mag's take on leggings gathers momentum". The Times of India. 25 September 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதம்_(இதழ்)&oldid=4179211" இலிருந்து மீள்விக்கப்பட்டது