கும்பகோணம் ராஜா வேத காவ்ய பாடசாலை
கும்பகோணம் ராஜா வேத காவ்ய பாடசாலை , கும்பகோணம் நகரிலுள்ள பழம்பெருமை வாய்ந்த பாடசாலையாகும்.
அமைவிடம்
தொகுராஜா வேத காவ்ய பாடசாலா என்றும் ராஜா வேத காவ்ய பாடசாலை என்றும் அழைக்கப்படுகின்ற இந்தப் பாடசாலை கும்பகோணம் சக்கரபாணி கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுகோவிந்த தீட்சிதர் முயற்சியால் வடிவம் பெற்றவற்றில் இப்பாடசாலையும் ஒன்றாகும். அவரது பிற பணிகளில் திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு, கும்பகோணம் கும்பேசர் கோயிலின் புதிய சன்னதிகள், ராஜகோபுரம், கும்பகோணம் இராமசுவாமி கோயில் உள்ளிட்ட திருப்பணிகள் அடங்கும்.[1] கி.பி.1542இல் இவரால் உருவாக்கப்பட்ட இந்த பாடசாலை பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. இப்பாடசாலையை நிர்வகிக்க கி.பி.1972இல் அத்வைத வித்யாசார்ய மகாராஜா சாகிப் ஸ்ரீ கோவிந்த தீட்சிதர் புண்ய ஸ்மரன சமிதி அமைக்கப்பட்டது. [2]
வகுப்புகள்
தொகுஇப்பாடசாலையில் நான்கு வேதங்களிலும் எட்டு ஆண்டுகள் மற்றும் பத்து ஆண்டுகளுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. [2] இப்பாடசாலையில் வேதம் படித்துக் கொண்டே பள்ளிப்படிப்பையும் தொடர வாய்ப்புள்ளது. [3]
புதுப்பித்தல்
தொகு1933இல் புதுப்பிக்கப்பட்ட இப்பாடசாலை, நவம்பர் 1, 2015இல் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ பாலாஜி, கோவிந்த தீட்சிதர், கல்கி, 29.2.2004
- ↑ 2.0 2.1 2.2 Kumbakonam Vedic school gets a facelift, The Hindu, 1st November 2015
- ↑ கும்பகோணத்தில் 473 ஆண்டுகள் பழமையான ராஜவேத காவிய பாடசாலை புதுப்பித்து இன்று திறப்பு, தி இந்து, நவம்பர் 1, 2015