கும்பம் தாளித்தல்

கும்பம் தாளித்தல் என்பது அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய்கள் வராமல் தடுப்பதற்காக செய்யப்படுகின்ற சடங்காகும். [1] இச்சடங்கு நம்பிக்கையின் அடிப்படையில் நாட்டார் மக்களால் செய்யப்படுகிறது.

சடங்கு முறை தொகு

இந்த சடங்கின் போது உடைந்த ஆட்டுக்கல் (உரல்), அம்மிக்கல், உலக்கை, முறம், விளக்குமாறு ஆகியவற்றை வண்டியில் ஏற்றுக் கொண்டு ஊரில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் சேகரிக்கின்றனர். அந்த வாகனத்தின் முன்பு வாயை கட்டிக்கொண்டு பூசாரி செல்வார். ஊர் மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலம் செல்கின்றனர். ஊர் முழுக்க ஊர்வலம் சுற்றிப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, ஊருக்கு வெளியே உள்ள எல்லைப் பகுதிக்குக் கொண்டுபோய் பூஜைசெய்து பொருட்களைக் கொட்டிவிட்டுத் திரும்புவார்கள்.

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பம்_தாளித்தல்&oldid=3728873" இலிருந்து மீள்விக்கப்பட்டது