கும்பர்லி மலைக் கணவாய்
கும்பர்லி மலைக் கணவாய், இந்தியவின் மகராட்டிர.மாநிலத்தின் கடலோர மாவட்டமான இரத்தினகிரியின் கொன்கன் பகுதியையும் சாட்டாரா மாவட்டத்தின் தேசு பகுதியையும் இணைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையினுடாகச் செல்கிறது. மகராட்டிரத்தின் ககொன்கன் மற்றும் காட்மாத்தாவை இணைக்கக்கூடிய சில இணைப்புச் சாலைகளில் இதுவும் ஒன்று. ஒரு மாநில உநெடுஞ்சாலை 625மீ உயரத்தில், உள்ளது. இது இரத்தினகிரி மாவட்டத்தின் சீபுலன் நகர்ததையும் சாட்டாரா மாவட்டத்தின் காராட்டையும் இணைக்கிறது. கிழக்கு பகுதியின் அருகே கொன்யா அணை உள்ளது.
அமைவிடம்
தொகுஇந்த கணவாய் காராட்-சீபுலன் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உம்பிராசு அருகே இச்சாலை தேசிய நெடுஞ்சாலை -நான்கோடு இணைகிறது. மல்கார்பேத், படன் மற்றும் கோயானாநகர் இச்சாலையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.