கும்மகிவி
கும்மகிவி என்பது பின்லாந்தில் உள்ள ருகோலொஹ்டியில் ஒரு பெரிய சமநிலை பாறையாகும். 7 மீட்டர் நீளமான இப் பாறாங்கல் குவிந்திருக்கும் ஒரு குமிழின் மேற்பரப்பில் மிகச் சிறிய இடத்தை தொட்டுக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் மனித சக்தியால் தகர்க்க முடியாத பாறாங்கல்லாக அமைந்துள்ளது.
கும்மகிவி ("விசித்திரமான கல்") 1962 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1980 ஆம் ஆண்டிலிருந்து தோற்றமளிக்கும் இப்பாறையின் மீது ஒரு பைன் மரம் வளர்கிறது.
பியூமாலாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள ருக்கோலோகாதி நகராட்சியின் மேற்குப் பகுதியிலுள்ள ஒரு காட்டில் இப்பாறை அமைந்துள்ளது.