குயரிஸ்தான் (புத்தகம்)

குயரிஸ்தான் என்பதுபரமேஷ் சகானி ழஎழுதிய பால் புதுமையினர் மற்றும் பால் சிறுபான்மையினர்  தங்கள் அலுவலகங்களில்,, வேலை செய்யும் இடங்களில் நடத்தப்படும் விதங்களைப் பற்றிய ஒரு புத்தகமாகும். இந்த புத்தகம் 17 ஆகஸ்ட் 2020 இல் வெஸ்ட்லேண்ட் வெளியீடுகள் என்ற புத்தக நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. [1] [2]

குயரிஸ்தான்
நூலாசிரியர்பரமேஷ் சகானி
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைந.ந.ஈ.தி
வெளியீட்டாளர்வெஸ்ட்லாண்ட் வெளியீட்டாளர்கள்
ISBNபன்னாட்டுத் தரப்புத்தக எண் 9389648149

வரவேற்பு

தொகு

பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புத்தகதைப் பற்றி, மணிகண்ட்ரோல் இணையதளம், அதன் விமரிசனத்தில் இவ்வாறு, கூறியுள்ளது; " எவரும் தன்னை ந.ந.ஈ.தி என அடையாளப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், வேலை செய்யும் இடங்களில் பிற நபர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டால், எந்த வித வேறுபாடும் , பிரிவினையும் இல்லாமல் சக  கூட்டாளியாக மதித்தல், வணிக நிறுவனங்கள் இதற்காகவே பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளை உருவாக்குதல், ந.ந.ஈ.தி சமூக நபர்களின் திறமையைக் கண்டறிதல், ந.ந.ஈ.தி-க்கு நட்பான ஒரு ஆட்சேர்ப்பு செயல்முறையை உருவாக்குதல், பணியிடத்தில் ந.ந.ஈ.தி-க்கு ஏற்ற பணி கலாச்சாரத்தை உருவாக்குதல், மற்றும் வணிக நிறுவனங்களின் பொறுப்புணர்வு, எப்படி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்களை ஆசிரியர் இப்புத்தகத்தில் உள்ளடக்கியுள்ளார் "[3]

அவள் மக்கள் என்ற தொலைக்காட்சி விமரிசனத்தில், "வணிக நிறுவனக் கொள்கைகளில் ந.ந.ஈ.தி சமூகத்தைப் பற்றிய மாற்றங்கள் கொண்டு வரப்படாவிட்டால், சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள சில உரிமைகள்  எப்படி வெறுமையாகவும், பெயரளவு செயல்களாகவும்  இருக்கும் என்பதைப் பற்றி புத்தகத்தில்  அதன் நடைமுறைகளை சகானி குறிப்பிடுகிறார்." [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Struggle for LGBTQ rights is deeply connected to other social justice movements: Parmesh Shahani on his new book, Queeristan". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  2. India, Vogue (September 2020). "Exclusive: In an excerpt from his latest book, Parmesh Shahani talks to Sonam Kapoor Ahuja about labels, LGBTQ inclusion and plurality". Vogue India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  3. "Book review: Parmesh Shahani's Queeristan makes pitch for queer-friendly workplace". Moneycontrol (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  4. "Book Review: Queeristan Is A Guide To Building Inclusive Workspaces". www.shethepeople.tv. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குயரிஸ்தான்_(புத்தகம்)&oldid=3670583" இலிருந்து மீள்விக்கப்பட்டது