குயின்சுலாந்து அலுமினா நிறுவனம்
குயின்சுலாந்து அலுமினா நிறுவனம் (Queensland Alumina Limited) உலகின் அலுமினா உற்பத்தி திறன் கொண்ட மிகப்பெரிய அலுமினியம் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும் [1][2],. இந்நிறுவனம் ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்திலுள்ள கிளாடுசுடோன் மண்டலத்தில் இருக்கும் துணை நகரமான சவுத் டிரீசில் அமைந்துள்ளது.
இச்சுத்திகரிப்பு நிறுவனம் 1964 [3] ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. 1967 [4], ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3.95 மில்லியன் டன்கள் அலுமினாவை உற்பத்தி செய்யும் திறனை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 1981 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட தரவுகளின் படி ஒவ்வொரு காலாண்டிற்கும் 600,000 டன் அலுமினா இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது [5].
அலுமினா குறைந்த அளவு கோரிக்கை உள்ள நேரங்களில் இங்கு உற்பத்தி நடவடிக்கைகள் மாற்றப்படுகின்றன [6][7]. தேவை அதிகரிப்பு இருக்கும் நேரங்களில் வெளியீடு மற்றும் வேலைவாய்ப்பில் விரிவாக்கம் மேற்கோள்ளப்படுகிறது [8]. குயின்சுலாந்து அலுமினா நிறுவனம் காலப்போக்கில் பல்வேறு அனைத்துலக அலுமினிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களால் இயக்கப்பட்டது. 1969 இல் கோமல்கோ கூட்டமைப்பு இந்நிறுவனத்தை இயக்கியது [9]. 1982 இல் கோமல்கோ (30.3%), கைசர் அலுமினியம் (28.3%), அல்கான் (21.4%), மற்றும் பெச்சினேய் உகின் குல்மான் (20%) என மாறுபட்டது [10].
ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு முதல், ரியோ டின்டோ அல்கேன் (80%) மற்றும் ரசல் (20%) ஆகிய நிறுவன்ங்கள் இயக்கி வருகின்றன [11]. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்த்தில் குயின்சுலாந்து அலுமினா நிறுவனம் 50 ஆண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடியது [12][13].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Q. Alumina refinery to be world's biggest". The Canberra Times (Australian Capital Territory, Australia) 43, (12,265): p. 15. 21 March 1969. http://nla.gov.au/nla.news-article107084533. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Queensland Alumina's ' output up to 2.4m tonnes". The Canberra Times (Australian Capital Territory, Australia) 55, (16,539): p. 19. 7 January 1981. http://nla.gov.au/nla.news-article125645684. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "£52 Million Alumina Plant Plan". The Canberra Times (Australian Capital Territory, Australia) 38, (10,885): p. 3. 27 June 1964. http://nla.gov.au/nla.news-article105767703. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ Queensland Alumina Ltd (1967), Queensland Alumina : official opening procedure, August 1967, Thursday August 3 - Friday August 4, Gladstone, Qld. Queensland Alumina, பார்க்கப்பட்ட நாள் 13 October 2017
- ↑ "Alumina record". The Canberra Times (Australian Capital Territory, Australia) 55, (16,721): p. 27. 8 July 1981. http://nla.gov.au/nla.news-article127049670. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Alumina troubles not long term". The Canberra Times (Australian Capital Territory, Australia) 46, (13,019): p. 19. 15 January 1972. http://nla.gov.au/nla.news-article101752767. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Alumina shut-down". The Canberra Times (Australian Capital Territory, Australia) 56, (17,031): p. 20. 15 May 1982. http://nla.gov.au/nla.news-article126895883. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Alumina plant to lift output". The Canberra Times (Australian Capital Territory, Australia) 57, (17,421): p. 13. 10 June 1983. http://nla.gov.au/nla.news-article131848415. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Comalco gains interest in Q'ld Alumina". The Canberra Times (Australian Capital Territory, Australia) 44, (12,457): p. 22. 1 November 1969. http://nla.gov.au/nla.news-article107901422. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ "Alumina shut-down". The Canberra Times (Australian Capital Territory, Australia) 56, (17,031): p. 20. 15 May 1982. http://nla.gov.au/nla.news-article126895883. பார்த்த நாள்: 13 October 2017.
- ↑ In the aluminium power play, water works The Age 23 April 2005
- ↑ Christine Mckee, (13 September 2017), QAL celebrates 50 years in Gladstone, The Observer (Gladstone). Retrieved 13 October 2017
- ↑ Queensland Alumina Limited (1975), Queensland Alumina : the giant that never sleeps, the Company, பார்க்கப்பட்ட நாள் 13 October 2017