குயிலி ராஜேஸ்வரி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குயிலி இராஜேஸ்வரி தமிழகத்தின் பெண் சிறுகதை, புதின எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார்.
படைப்புக்கள்
தொகுஇவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. பெரியவர்களுக்காக 25 இற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் இவர் எழுதியுள்ளார். தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிகளிலும் இவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும்.
நேஷனல் புக் டிரஸ்டுக்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார். இவர் அமைத்து நடத்தி வந்த மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ் என்ற குழந்தைகள் சங்கத்தினர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட அளித்து வந்தனர்.