திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
(குரங்கு நாத கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் ஒன்றியத்தில் சீனிவாசநல்லூரில் அமைந்துள்ளது.[1] குரங்குநாதர் கோயில் என்பது காரணப் பெயராக விளங்குகிறது. திருக்கொருக்குத்துறை மகாதேவர் கோயில் என்பதே இக்கோயிலின் மூலப் பெயராகும்.[2][3] இது திருச்சிராப்பள்ளியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சீனிவாசநல்லூர் என்ற ஊரில் உள்ளது. இக்கோயில் இவ்வூரின் மையப்பகுதியில் உள்ளது. சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இக்கோயில் இந்துக் கோயில் ஆகும்.

இக்கோயில் 9ம் நூற்றாண்டில் முதல் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிப்புறச் சுவரில் சோழர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுற்றுச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி சிலை, விஷ்ணு சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. V.Kanadasamy (12 September 2015). The local history , culture and symbols of Tamilnadu: தமிழ்நாட்டின் தல வரலாறுகளும், பண்பாட்டுச் சின்னங்களும். Mukil E Publishing And Solutions Private Limited.
  2. தமிழ் மரபு அறக்கட்டளை (15 July 2017). மின்தமிழ்மேடை - 10. தமிழ் மரபு அறக்கட்டளை.
  3. கோகுல் சேஷாத்ரி (2010). மதுரகவி. பழனியப்பா பிரதர்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-540-1.