குரங்கு விளையாட்டு
குரங்கு விளையாட்டு சிறுவர் சிறுமியர் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று.
உள்வட்டம் ஒன்று, வெளிவட்டம் ஒன்று போடுவர். பட்டவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரைக் குரங்கு என்பர். அவரை நடுவில் உள்ள உள்வட்டத்துக்குள் உட்கார வைப்பர். மற்றவர்கள் வெளிவட்டக் கோட்டில் உட்காருவர். உரையாட்டுப்பாடல் நிகழும்.
வட்டத்தில் உள்ளவர் (சேர்ந்திசை) | குரங்காகி நடுவில் இருப்பவர் |
---|---|
குரங்கே குரங்கே மணி எத்தனை | ஒன்று |
குரங்கே குரங்கே மணி எத்தனை | இரண்டு |
--- | --- |
குரங்கே குரங்கே மணி எத்தனை | பத்து |
பத்து என்றதும் எல்லாரும் எழுந்து ஓடுவர். குரங்கு பிடிக்கவேண்டும். பிடிபட்டவர் குரங்காக்கப்படுவார். ஓடுபவர் குரங்கு இருந்த வட்டத்துக்குள் நுழைந்துவிட்டால் தொடக்கூடாது.
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம். தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980