குராப்பள்ளி

குராப்பள்ளி என்பது சங்க காலத்தில் சிறப்புற்று விளங்கிய சோழநாட்டு ஊர்களில் ஒன்று. இந்த ஊரில் மருத்துவர் பலர் வாழ்ந்தனர் எனலாம். காரணம் இந்த ஊரில் இருந்தபோதுதான் இரண்டு சோழ அரசர்கள் தம் இறுதிக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் [1], சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் [2], என்போராவர்.

திருச்சிராப்பள்ளி என்னும் ஊர் திருச்சி என மருவியுள்ளது. அதுபோலக் குரிச்சி என வழங்கப்பட்டுவந்த ஊர் [3] சங்ககாலத்துக் குராப்பள்ளி எனலாம்.

மேற்கோள் குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குராப்பள்ளி&oldid=1663923" இலிருந்து மீள்விக்கப்பட்டது