குருசடி

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

குருசடி - இது கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊராகும். இங்கு, உயரமான இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஓர் இடமாகும். இந்த ஊரின் பழமையான பெயர் பஞ்சவங்காடு ஆகும். இங்குள்ள கிணறு வற்றாத ஊற்றைக் கொண்டதாகும். கடல் ஊற்றாக இருந்தாலும், இனிய சுவையைக் கொண்ட தண்ணீர் ஆகும்.

இங்குள்ள இரண்டு கோபுரங்களும், 111 - 101 மீட்டர் உயரங்களில் அமைந்துள்ளன. இந்த கோபுரங்கள் கருப்புக்கட்டி சாற்றாலும், முட்டையின் வெள்ளைக் கருவையும், சுண்ணாம்பையும் கலந்து கட்டப்பட்டவை.

அதனால் இந்த கோபுரம் சிமிண்டை விட மிகவும் உறுதியாக உள்ளது. இது கட்டப்பட்டு 100 ஆண்டுகள் தாண்டிய பின்னும் இன்னும் வெடிப்புகள் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கோபுரங்களில் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட இராட்சஷ மணிகள் உள்ளன.

இந்த ஊரில் தானாகவே முளைத்த ஒரு கல் குருசு உள்ளது. அதனால்தான் குருசடி என்ற பெயர் ஏற்பட்டது.

இப்போது இந்த ஊரில் நூற்றாண்டு விழாவுக்காக கோயில்களும் கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஊரில்தான் புகழ்பெற்ற திருச்சிலுவை கல்லூரி அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருசடி&oldid=2987568" இலிருந்து மீள்விக்கப்பட்டது