குரு ராம் தாஸ்
சீக்கியர்களின் நான்காம் குரு
குரு ராம் தாஸ் (1534-1581) நான்காம் சீக்கிய மதகுரு ஆவார்.
குரு ராம் தாஸ் லாகூரில் 1534ஆம் ஆண்டு பிறந்தார். 1574ஆம் ஆண்டு சீக்கிய மதகுருவானார். இவர் புனித நகரான அமிர்தசரஸ் மற்றும் ஹர்மந்திர் சாஹிப் அல்லது தர்பார் சாஹிப் அல்லது பொற்கோவிலைத் தோற்றுவித்தார். இது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும்.