குரு (கத்தோலிக்கம்)

உரோமன் கத்தோலிக்க திருச்சபையை நிர்வகிப்பவர்களாக ஆயர், கர்தினால், திருத்தந்தை, குரு, திருத்தொண்டர் ஆகியோர் உள்ளனர். குருக்கள் இயேசுவின் பணிக்குருத்துவத்தை தொடர்ந்து ஆற்றும் கடைநிலை ஊழியர்கள். கத்தோலிக்க குரு அருட்தந்தை அல்லது அருட்பணியாளர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.[1]

வரலாறு

தொகு

பழைய ஏற்பாட்டில் கடவுள் லேவிகளை ஏற்படுத்தினார். இவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளர்களாக திகழ்ந்தனர்.புதிய ஏற்பாட்டில் இயேசு தனது இறையாட்சி பணியை தொடர்ந்து ஆற்ற பன்னிரு திருத்தூதர்களை ஏற்படுத்தினார். திருத்தூதர்கள் குரு மற்றும் ஆயரின் முன்னோடியாக திகழ்கின்றனர்.

இறையியல்

தொகு
 
குருவாக திருநிலைப்படுத்தப்படும் திருசடங்கு

அருட்பணியாளரின் இறைஅனுபவம்தான் அவரை இறைவனின் ஊழியர் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளான இறைவாக்கு பணி, புனிதப்படுத்தும் பணி, மேய்ப்பு பணி ஆகிய முப்பெரும் பணிகளை கிறிஸ்துவின் மனநிலையோடு தங்களின் வாழ்வுச் சூழலுக்கேற்ப நிறைவேற்றுவதன் வழியாக அருட்பணியாளர்கள் புனித வாழ்வில் வளர்கின்றனர். அருட்பணியாளர்கள் இயேசுவை போன்று தாழ்ச்சியுடையவர்களாகவும், நட்புடன் பழகுபவர்களாகவும், இறைமக்களை இன்முகத்துடன் வரவேற்பவர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும் அதே சமயம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர்களாகவும், உரையாடல் மனநிலை கொண்டவர்களாகவும், பிறர் பற்றிய தவறான எண்ணம் அற்றவர்களாகவும், நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.[2]

பணிகள்

தொகு

குருக்கள் பங்குதளங்களை நிர்வகிக்கும் முக்கிய பணியை செய்கின்றனர். பங்குகளில் திருப்பலி நிறைவேற்றுதல், அருட்சாதனங்களை நிறைவேற்றுதல், ஆற்றுப்படுத்துதல் போன்ற பணிகளை செய்கின்றனர். இதைத்தவிர பள்ளி, கல்லூரிகளை நடத்தும் பணிகளையும் செய்கின்றனர்.

தனிப்பட்ட வாழ்க்கை முறை

தொகு

ஆதாரங்கள்

தொகு

கத்தோலிக்க மறைக்கல்வி குருவாக குரு வரலாறு

  1. http://www.catholic.org/encyclopedia/view.php?id=9622
  2. "அருட்பணியாளர் இறைவனின் ஊழியர்". Archived from the original on 2015-03-31. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_(கத்தோலிக்கம்)&oldid=3581868" இலிருந்து மீள்விக்கப்பட்டது