குரோமடாகாவா அணை

சப்பானின் நிகாட்டா மாகாணத்தில் உள்ள ஓர் அணை

குரோமடாகாவா அணை (Kuromatagawa Dam) சப்பான் நாட்டின் நீகாட்டா மாகாணத்தின் உவோனுமா நகரத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 91 மீட்டர் உயரமும் 276 மீட்டர் நீளமும் கொண்டதாக குரோமடாகாவா அணை கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்தி பயன்பாட்டுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 201.6 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும் போது இதன் பரப்பளவு சுமார் 144 எக்டேர்களாகும். 42845 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

குரோமடாகாவா அணை
Kuromatagawa Dam
குரோமடாகாவா அணை is located in யப்பான்
குரோமடாகாவா அணை
Location of குரோமடாகாவா அணை
Kuromatagawa Dam in யப்பான்
அமைவிடம்உவோனுமா நகரம், நீகாட்டா, சப்பான்
புவியியல் ஆள்கூற்று37°19′17″N 139°5′50″E / 37.32139°N 139.09722°E / 37.32139; 139.09722

மேற்கோள்கள் தொகு

  1. "Kuromatagawa No.1 Dam [Niigata Pref.]". damnet.or.jp. பார்க்கப்பட்ட நாள் 2 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோமடாகாவா_அணை&oldid=3504472" இலிருந்து மீள்விக்கப்பட்டது