குரோமேட்டு எசுத்தர்
குரோமேட்டு எசுத்தர் (chromate ester) என்பது குரோமியம் அணு +6 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் ஆக்சிசன் பிணைவு வழியாக கார்பன் அணுவுடன் இணைந்துள்ள ஒரு வேதியியல் அமைப்புச் சேர்மமாகும். குரோமியம் மட்டும் குரோமேட்டு அமைப்பைப் பெற்று அதனுடன் பல ஆக்சிசன் அணுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. Cr–O–C என்ற கட்டமைப்பால், எசுத்தர் வேதிவினைக் குழுவின் கட்டமைப்புடன் குரோமேட்டு எசுத்தர் ஒத்துள்ளாதாகக் கருதப்படுகிறது. குரோமியம் குளோரைடு அணைவுகள், CrO3 மற்றும் நீரிய குரோமேட்டு அயனிகள் போன்ற குரோமியம்(VI) உலோகச் சேர்மங்கள் ஒடுக்கஏற்ற வினைகளில் ஈடுபட்டு குரோமேட்டு அமைப்பிலான குரோமியம்(VI) அணுக்களை வெளியிடுகின்றன. பிரிடினியம் டைகுரோமேட்டு அல்லது பிரிடினியம் குளோரோகுரோமேட்டால் நிகழும் ஆக்சிசனேற்ற வினை போன்ற யோன்சு ஆக்சிசனேற்ற வினையில் இக்குரோமேட்டு எசுத்தர்கள் முக்கிய செயல்திறன் மிக்க இடைநிலைகளாக செயல்படுகின்றன. அல்லைல் ஆல்ககாலின் குரோமேட்டு எசுத்தர்கள், முறையான [3,3]- சிக்மா மின்னனு நகர்வு வழியாக சமபடியாக்கம் மூலம் ஈனோன் விளைபொருட்களாக மறுசீராக்கம் அடைகின்றன [1].
தனித்துப் பிரித்தெடுக்க வல்ல குரோமேட்டு எசுத்தருக்கு உதாரணம்: (CH3)3CO)2CrO2. ஆகும் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Carruthers, W.; Coldham, I. (2004). Modern Methods of Organic Synthesis (4th ed.). p. 381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-77097-2.
- ↑ Fillmore Freeman, "Di-tert-butyl Chromate" Encyclopedia of Reagents for Organic Synthesis, 2001, John Wiley & Sons, Ltd. எஆசு:10.1002/047084289X.rd059m
.