குரோமைட்டு (சேர்மம்)
வேதியியலில் குரோமைட்டு ( chromite) என்பது CrO−2. எதிர்மின்னயனியைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கும். நேரயனிகளுடன் இறுக்கமாகப் பிணைந்த நிலையில் காணப்படும்[1] இவ்வெதிர் அயனி தனித்து இருப்பதில்லை. மிகவும் பரவலாக அறியப்பட்ட குரோமைட்டு இதே பெயரிலுள்ள FeCr2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இதைத்தவிர பல குரோமைட்டுகள் அறியப்படுகின்றன.
பெரும்பாலான குரோமைட்டுகளின் வாய்ப்பாடு MCrO2 அல்லது MCr2O4,என்றே அமைகிறது. Cr(III) அயனியைக் கொண்டுள்ள பிற எதிர்மின்னயனிச் சேர்மங்களும் குரோமைட் என்ற வகைப்பாட்டுக்குள் இடம்பெறுகின்றன. உதாரணமாக, அறுசயனோகுரோமைட்டு மற்றும் அறு ஐதராக்சிகுரோமைட்டுகள் முறையே [Cr(CN)6]3− மற்றும் [Cr(OH)6]3−,எதிர்மின்னயனிகளால் ஆனவையாகும்[2]. ஐயுபிஏசி முறை பெயரிடும் திட்டத்தில் குரோமைட்டுகள் குரோமேட்டு(III) என்று வழங்கப்படுகின்றன இருப்பினும் இம்முறையிலான பெயர் அரிதாகவே பின்பற்றப்படுகிறது.
குரோமியம்(III) ஆக்சைடுடன் உலோக ஆக்சைடுகள் வினைபுரிவதால் குரோமைட்டுகள் உருவாகின்றன:[3]
- Cr2O3 + MgO → MgCr2O4.
குரோமைட்டுச் சேர்மங்களான FeCr2O4 போன்றவற்றை கோட்பாட்டு அளவிளான அமிலமான HCrO2 குரோமசு அமிலத்தில் இருந்து தருவிக்க இயலும். ஆனால் இவ்வினச்சேர்மம் தனித்து அறியப்படவில்லை[4].
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ "Chromates". Concise encyclopedia chemistry. (1994). Ed. Mary Eagleson. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8.
- ↑ Kunnmann, W. (1973). "Magnesium Chromite: (Magnesium Chromium (III) Oxide)". Inorganic Syntheses 14: 134. doi:10.1002/9780470132456.ch26.
- ↑ Hamilton, W. C.; Ibers, J. A. (1963). "Structures of HCrO
2 and DCrO
2". Acta Crystallographica 16 (12): 1209–1212. doi:10.1107/S0365110X63003182.