குர்ட் அன்கிள்

அமெரிக்க நடிகர், தொழில்முறை மற்போர் வீரர்

குர்ட் ஸ்டீவன் அன்கிள் (Kurt Steven Angle பிறப்பு:டிசம்பர் 9, 1968) என்பவர் ஓர் நடிகர், முன்னாள் தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் தற்போது இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி அதன் பின்னிருப்பு பணிகளின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.[1][2] இவர் பெனிசிலிவேனியாவில் உள்ள கிளாரியன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது  தேசிய கல்லூரி தடகள சங்க மிகுகன வாகையாளர் பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக மற்போர் வாகையாளர் போட்டியில் ஃபிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார்.  தொழில்முறை அல்லாத மற்போர் போட்டிகளில் நிறைவெற்றி பெற்றுள்ள நான்கு பேர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் இளையோர் சர்வதேச வாகையாளர் பட்டம், தேசிய கல்லூரி தடகள சங்க மிகுகன வாகையாளர் பட்டம், உலக வாகையாளர் பட்டம் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இவரை மிகச் சிறந்த சூட்டர் மற்போர் வீரர் எனவும் கல்லூரி அளவிலான அனைத்துக் காலத்திற்குமான சிறந்த 15 மற்போர் வீரர்களில் ஒருவர் எனவும் அமெரிக்க மற்போர் சஙகம் அறிவித்தது. 2016 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார்.

ஆங்கிள் 1996 ஆம் ஆண்டில் தனது முதல் புரோ ரெச்லிங் போட்டியில் கலந்துகொண்டார். பின் டபிள்யூ டபிள்யூ எஃப் (தற்பொழுது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்) உடன் 1998 இல் ஒப்பந்தம் ஆனார். இருந்தபோதிலும் 1999 இல் தான் தனது முதல் போட்டியில் விளையாடினார். 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பியன் மற்றும் கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் ஆகிய பட்டங்களை ஒரே சமயத்தில் பெற்றார். நான்கு மாதங்கள் கழித்து 2000 ஆம் ஆண்டிற்கான கிங் ஆஃப் தெ ரிங்  வாகையாளர் ஆனார்.[3] பின் அக்டோபரில் டபிள்யூ டபிள்யூ எஃப் வாகையாளர் ஆனார். உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினை நான்கு முறையும் டபிள்யூ சி டபிள்யூ வாகையாளராக ஒரு முறையும் மற்றும் உலக மிகு கன வாகையாளராக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். பத்தாவது டிரிபிள் கிரவுண் சாம்பியன் (மூன்றாம் கிரீட வாகையாளர்) மற்றும்  ஐந்தாவது கிராண்ட் சிலாம் வாகையாளராகவும்  வெற்றி பெற்றுள்ளார். மார்ச் 31, 2017 இல் இவர்  ஹால் ஆஃப் ஃபேமாக  அறிவிக்கப்பட்டார்.[4] உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம், சப்பான் மற்றும்  டி என் ஏ ஆகிய மற்போர் போட்டிகளில் விளையாடி இவர் 21 முறை வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். உலக மற்போர் வரலாற்றில் அதிக வாகையாளர் பட்டங்கள் பெற்றவர் எனும் சிறப்பினைப் பெற்றார். இவர் உலக வாகையாளர் பட்டம், உலக மிகு கன வாகையாளர், டபிள்யூ சி டபிள்யூ வாகையாளர், டி என் ஏ உலக மிகு கன வாகையாளர்  மற்றும் ஐ ஜி எஃப் நிறுவனத்தின்  ஐ டபிள்யூ ஜி பி உலக மிகு கன வாகையாளர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். கிங் ஆஃப் தெ ரிங் மற்றும் கிங் ஆஃப் தெ மவுண்டைன்  ஆகிய இரு பட்டங்களைப் பெற்ற ஒரே மற்போர் வீரர் இவர் ஆவார். 2004 ஆம் ஆண்டில் ரெஸ்லிங் அப்செர்வர் நியூஸ்லெட்டர் இவரை ஹால் ஆஃப் பேமாகவும்  நூற்றாண்டின் சிறந்த மற்போர் வீரர் என அறிவித்தது. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.[5][6] இவருக்கு எதிராக விளையாடியவரும் மற்றும் துறைத்தேர்ந்த மற்போர் வீரரான ஜான் சேனா இவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். எந்த சந்தேகமும் அன்றி இவர் ஒரு மிகச் சிறந்த மற்போர் வீரர் ஆவார். ஆனால் இவர் மற்ற வீரர்களைப் போல் அல்லாது தனித்துவத்துடன் இருப்பார். எனக் கூறியுள்ளார்.[7]

சான்றுகள் தொகு

  1. Milner, John; Kamchen, Richard. "Kurt Angle". Slam! Sports. Canadian Online Explorer. பார்க்கப்பட்ட நாள் September 20, 2011.
  2. "Kurt Angle Reveals He Signed A Five-Year Deal With WWE, Taking On A Backstage Producer Role". Fightful.com. April 30, 2019. பார்க்கப்பட்ட நாள் July 1, 2019.
  3. "European Championship – Kurt Angle". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on June 16, 2012. பார்க்கப்பட்ட நாள் April 14, 2012.
  4. "6 Superstars who have won every active title: Photos". உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம். Archived from the original on April 4, 2015. பார்க்கப்பட்ட நாள் April 4, 2015.
  5. Moser, John J (January 5, 2016). "Pro wrestling great Kurt Angle says matches at Sands Bethlehem Event Center, will be among his last and best". The Morning Call. பார்க்கப்பட்ட நாள் September 21, 2016.
  6. Hines, Martin (October 20, 2017). "Kurt Angle is wrestling for WWE on Sunday night for the first time in 11 years". Metro. பார்க்கப்பட்ட நாள் November 8, 2017.
  7. "WrestleMania Orlando". WWE 24. WWE Network. 8 minutes in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்ட்_அன்கிள்&oldid=2915204" இலிருந்து மீள்விக்கப்பட்டது