குர்னகோவ் சோதனை
குர்னகோவ் சோதனை ( Kurnakov test) என்பது சோவியத் வேதியியலாளர் நிக்கோலாய் செமெனோவிச் குர்னகோவ் உருவாக்கிய வேதியியல் சோதனையாகும். குர்னகோவ் வினை என்ற பெயராலும் இச்சோதனை அழைக்கப்படுகிறது[1][2][3]. மறுபக்க மாற்றிய நிகழ்வின் விளைவுகளைப் பயன்படுத்தி சதுர அணைவுச் சேர்மங்களில் [PtA2X2] (A=NH3, X= ஆலசன் அல்லது அமில இயங்குபொருள்) காணப்படும் ஒருபக்க, மறுபக்க மாற்றியன்களின் இணையை வேறுபடுத்தி அறியலாம். இதற்காக சதுர அணைவுகள் தயோயூரியாவுடன் சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்படுகின்றன. பொதுவாக இச்சோதனை பிளாட்டினச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பயன்கள்
தொகுஒருபக்க-பிளாட்டினம் மற்றும் மறுபக்க-பிளாட்டினம் ஆகியவற்றை வேறுபடுத்தி அறிய இச்சோதனை பயன்படுகிறது. சூடான நீர்த்த கரைசலில் ஒருபக்க சேர்மம் நீர்த்த தயோயூரியாவுடன் வினைபுரிந்து ஆழ்ந்த மஞ்சள் நிறக் கரைசல் தோன்றுகிறது. இக்கரைசலை குளிரச்செய்து தயோயூரியா பிளாட்டினம்(II) குளோரைடு மஞ்சள் நிற ஊசிகளாகப் படிகமாகிறது. வினைபுரிவது மறுபக்க சேர்மமாயிருந்தால் நிரமற்ற கரைசல் உருவாகி, குளிர்விக்கும்போது அதிலிருந்து வெண்மையான ஊசிகளாக மறுபக்க-பிசு(தயோயூரியா)டையமைன்பிளாடினம்(II) படிவுகள் கிடைக்கின்றன[4][5].
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Life and Work of Nikolai Semenovich Kurnakov" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2017-01-29.
- ↑ Kurnakow, N. (1894). "Ueber complexe Metallbasen; Erste Abhandlung". Journal für Praktische Chemie 50: 481–507. doi:10.1002/prac.18940500144.
- ↑ George B. Kauffman (1983). "Nikolaĭ Semenovich Kurnakov, the reaction (1893) and the man (1860–1941) a ninety-year retrospective view". Polyhedron 2 (9): 855–863. doi:10.1016/S0277-5387(00)81400-X.
- ↑ Kong, Pi-Chang; Rochon, F.D. (1979). "cis- and trans-Platinum compounds of substituted pyrimidines and their products from thiourea in Kurnakov's reaction". Canadian Journal of Chemistry 57 (5): 526–529. doi:10.1139/v79-086.
- ↑ Woollins, J (1983). "The detection of trace amounts of trans-Pt(NH3)2Cl2 in the presence of cis-Pt(NH3)2Cl2. A high performance liquid chromatographic application of kurnakow's test". Polyhedron 2 (3): 175–178. doi:10.1016/S0277-5387(00)83954-6.