குர்பிரீத் சிங் (நடைப்போட்டியாளர்)

குர்பிரீத் சிங் (Gurpreet Singh) இந்தியாவின் வடக்கிலுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நடைப்போட்டி விளையாட்டு வீரராவார். ராஞ்சி நகரில் நடைபெற்ற 8 ஆவது இந்திய தேசிய வெற்றியாளர் போட்டியில் ஆண்கள் 50 கி.மீ நடைப்போட்டியில் பங்கேற்ற இவர் பந்தைய தொலைவை மூன்று மணி 59 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகளில் நடந்து முடித்தார். [1] 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். [2] 50 கி.மீ நடைப்போட்டிக்கான உலகத் தர வரிசையில் குர்பிரீத் சிங் 104 ஆவது இடத்திலுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் சுலோவாக்கியா நாட்டின் மாதேச்சு டோத் பந்தைய தொலைவை 3 மணி 40 நிமிடங்கள் 58 விநாடிகள் நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின் சந்தீப் குமார் அந்த பந்தயத்தில் 4 மணி 07 நிமிடங்கள் 55 விநாடிகள் நேரத்தில் கடந்து 35 ஆவது இடத்தைப் பிடித்தார்.

குர்பிரீத் சிங்
Gurupreet Singh
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)நடைப்போட்டி

ஆண்கள் 50 கி.மீ நடைப்போட்டியில் பிரான்சின் யோகன் டினிசு உலக சாதனை படைத்துள்ளார். அவர் மூன்று மணி முப்பத்தி இரண்டு நிமிடங்கள் 33 நொடிகளில் இத்தொலைவை கடந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு சூரிச் நகரில் இச்சாதனையை அவர் நிகழ்த்தினார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இலண்டன் ஒலிம்பிக்கில் ஆத்திரேலியாவின் இயாரெட்டு டாலண்டு 3.36.53 விநாடிகளில் ஓடியது ஒலிம்பிக் சாதனையாக உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Gurpreet Singh wins 50km race-walk event at National Championships". TOI. 14 Feb 2021. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/gurpreet-singh-wins-50km-race-walk-event-in-national-championships/articleshow/80906517.cms. பார்த்த நாள்: 16 Jul 2021. 
  2. "Who is Gurpreet Singh - India's race walker who has qualified for the Tokyo Olympics 2020". Sports Keeda. 6 Jul 2021. பார்க்கப்பட்ட நாள் 16 Jul 2021.