குறமகள் குறியெயினி

குறமகள் குறி எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பாலை நிலத்துப் பெண்ணை எயினி என்பர். குறி சொல்லும் பெண்ணாக இருந்தமையால் இவரைக் குறியெயினி என்றனர். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கெள்ளுமாகையால் குறிஞ்சி நிலக் குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவால் பேசப்படுகிறாள்.

குறமகள் இளவெயினி என்னும் புலவர் பெயரிலும் இந்தப் பெயர் அமைப்பை உணரலாம்.

இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது நற்றிணை 357 எண் கொண்ட பாடலாக உள்ளது.

நற்றிணை 357 சொல்லும் செய்தி

தொகு

திருமணம் காலம் தாழ்கிறது. தோழிக்குத் தலைவியைப் பற்றிய கவலை. தலைவி பொறுத்திருப்பேன் என்கிறாள்.

மலைச்சோலைப் பாறையில் ஏறி மயில் ஆலிற்று. அப்போது அங்கிருந்த சுனையில் பூத்திருந்த நீலமலர் அவரும் நானும் நீராடும்போது எங்களைப் பார்த்து ஆடியது. நான் சூடியிருந்த நீலமலர்க் கண்ணியும் நீரலையில் ஆடியது. நான்தானே நீராடினேன். இப்போது அவர் பிரிந்தாலும் நானே தாங்கிக்கொள்வேன் - என்கிறாள் தலைவி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறமகள்_குறியெயினி&oldid=3876270" இலிருந்து மீள்விக்கப்பட்டது