குறள் தாழிசை

குறள் தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று

குறள் தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. [1]இது குறள் வெண்பாவின் இனம்.

இதில் இரண்டு வகை உண்டு. ஈற்றடி குறைந்து வருவது ஒருவகை. [2] செப்பலோசை சிதைந்து வருவது மற்றொருவகை.[3]

எடுத்துக்காட்டு

வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டையள் அல்லள் படி

தக்கயாகப்பரணி நூலில் உள்ள 815 பாக்களும் குறள் தாழிசையாக அமைந்துள்ளன.

உசாத்துணை

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. ‘அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
    சந்தழி குறளும் தாழிசைக் குறளே.’ (யாப்பருங்கலம் நூற்பா 64)

  2. ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்
    கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’.

  3. ‘தண்ணந் தூநீர் ஆடச் சேந்த
    வண்ண ஓதி கண்’.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்_தாழிசை&oldid=3453426" இலிருந்து மீள்விக்கப்பட்டது