குறிச் சார்பு

கணிதத்தில் குறிச் சார்பு (sign function or signum function) என்பது மெய்யெண்களின் மீது வரையறுக்கப்பட்ட ஒரு ஒற்றைச் சார்பு. இச்சார்பு இதற்கு உள்ளீடாகத் தரப்படும் மெய்யெண்ணுக்கு வெளியீடாக அதன் குறியைத் (+1 அல்லது -1) தருகிறது. குறிச் சார்பு பெரும்பாலும் sgn எனக் குறிக்கப்படுகிறது.

குறிச் சார்பு y = sgn(x)

வரையறை தொகு

x என்பது ஒரு மெய்யெண் எனில் குறிச் சார்பின் வரையறை:

 

பண்புகள் தொகு

  • எந்தவொரு மெய்யெண்ணையும் அதன் தனி மதிப்பு மற்றும் அதன் குறிச் சார்பின் பெருக்கலாக எழுதலாம்:

x ஏதேனுமொரு மெய்யெண் எனில்,

 

எனவே x பூச்சியமற்ற மெய்யெண் எனில்,

 
  •   .

சிக்கலெண்களில் தொகு

குறிச் சார்பை சிக்கலெண்களுக்குப் பொதுமைப்படுத்தலாம்.

 

for any z 

தரப்பட்ட சிக்கலெண் z இன் குறிச் சார்பின் சார்பலன் சிக்கலெண் தளத்தில் அலகு வட்டத்தின் மீது z க்கு மிக அருகாமையில் அமையும் ஒரு புள்ளி.

z ≠ 0 எனில்,

 

z = 0 க்கு குறிச் சார்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

 

மேற்கோள்கள் தொகு

  • Weisstein, Eric W. "Sign." From MathWorld
  • பக்கம்:23, புத்தகம்:கணிதவியல், இரண்டாம் தொகுதி, மேநிலை முதலாம் ஆண்டு- தமிழ்ப் பாடநூல் கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிச்_சார்பு&oldid=3754706" இலிருந்து மீள்விக்கப்பட்டது