குறிஞ்சி வஞ்சி

குறிஞ்சி வஞ்சி என்பது ஒரு சிறுமியர் விளையாட்டு.

ஆட்டம்

தொகு

ஒரு வட்டம் போடுவர். பட்டவர் அதில் தன் கண்களைத் தானே தன் கைகளால் மூடிக்கொண்டு நிற்பார்.

நிகழும் உரையாடல்

வரலாமா (பொத்திக்கொண்டிருப்பவர்)
வரக்கூடாது (மற்றவர்)

திரும்பத் திரும்பப் பலமுறை

எல்லாரும் ஒளிந்துகொண்டபின்

வரலாமா (பொத்திக்கொண்டிருப்பவர்)
வரலாம் (மற்றவர்)

கண்ணைப் பொத்திக்கொண்டிருப்பவர் கண்ணைத் திறந்துகொண்டு மறைந்திருப்போரை ஓடித் தொடுவார். மறைந்தவர் பிடிபடாமல் ஓடிவந்து வட்டத்துக்குள் நின்றுகொள்வர். பிடிபட்டவர் பட்டவராகிக் கண்களைப் பொத்திக்கொள்ள வேண்டும். பின் மறு ஆட்டம்.

பெயர் விளக்கம்

தொகு

குறிஞ்சி என்னும் சொல் அகத்திணை ஒழுக்கத்தில் மறைந்து நடந்துகொள்வதைக் குறிக்கும்; வஞ்சி என்பது இக்காலப் பொருளில் வஞ்சித்தலைக் குறிக்கும். எனவே மறைந்து வஞ்சிக்கும் விளையாட்டைக் குறிஞ்சி வஞ்சி என்கின்றனர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சி_வஞ்சி&oldid=976658" இலிருந்து மீள்விக்கப்பட்டது