குறி (குறியியல்)
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சமுதாய வாழ்வில் மக்கள் தங்கள் கருத்தைப் புலப்படுத்த பயன்படுத்தும் குறிகளைப் பற்றிய அறிவியல் குறியியல் ஆகும் என பெர்டினண்டு டி சசூர் குறிப்பிடுகிறார். சமுதாயத்தின் பொருண்மையைப் புலப்படுத்துதல் பற்றிய அறிவியல் என்று கெர் எலம் குறிப்பிடுகிறார். குறியியலின் அடிப்படை அலகு ’குறி’ என்பாதாகும். குறி ’குறி’ என்பதற்கு நிகரான ஆங்கிலச் சொல் ‘sign’ என்றச்சொல்லாகும் . இச்சொல் ‘symbolon’ என்ற கிரேக்கச் சொல்லிருந்துத் தோன்றியாதாகும்.பேச்சு தமிழிலும் எழுத்து தமிழிலும் ’குறி’ என்றச் சொல் பல்வேறு பொருண்மைகளைச் கொண்டதாகவே வழங்கப்படுகிறது. 1.ஆண் குறி பெண் குறி 2. குறி தப்பிவிட்டது 3.குறிக்கோளுடன் வாழ வேண்டும். என்னும் சான்றுகளில் முறையே அடையாளம், இலக்கு, நோக்கம் என்னும் பொருண்மைகள் அமைந்திருத்தலைக் காணலாம் குறி என்ற சொல் “அடையாளம்” என்ற பொருளில் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். குறியென படுவது இரவினும் பகலினும் அறியத் தோன்றும் ஆற்றது என்ப ( களவியல்:40)
பியார்ஸ் என்ற அறிஞர் “குறி” என்பதை பின்வருமாறு விளக்குகிறார்.”ஒரு பொருள் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு முறையில் விளக்குவது தான் குறி. ‘ஒரு பொருள்’ என்பது எழுத்தாக, ஒலியாக, வாசனையாக அணிகலனாக , ஆடையாக என எந்தப் பொருளாகவும் இருக்கலாம். ”ஏதோ ஒரு முறையில்” என்பது பொருளைப் பயன்படுத்தும் இனத்தின் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து அமைவதாகும். சசூர் குறிப்பான்(signifier), குறிப்பீடு (signified) என்ற கூறுகளைக் கொண்டு “ குறியை” விளக்க முற்படுகிறார். அவருடைய கருத்துப்படி குறிப்பானும் குறிப்பீடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலாகும். அவற்றைப் பிரிக்க இயலாது. உதாரணமாக “ ரோஜா” என்ற ”பூ ” குறிப்பான்(signifier), ” ஒரு வகையான பூ” என்பது குறிப்பீடு(signified). ஆனால் ஒரு வாலிபர் காதலின் அடையாளாமாக கொடுக்கும்போது “ ரோஜா” என்ற ”பூ ” குறிப்பான்(signifier) , “ காதல்” என்பது குறிப்பீடு(signified). குறிகளின் வகைகள் குறிகளை மூன்று வகைகளாக ப் பிரிக்கலாம். அவை 1.உருவக் குறிகள் 2. சுட்டுக் குறிகள் 3. குறியீட்டுக் குறிகள் . உருவக் குறியில் ஒரு குறிப்பான், ஒரு குறிப்பீட்டின் பெளதிகக் கூறினை மட்டும் பிரதிபலித்துக் காட்டுகிறது. சுட்டுக் குறியில் ஒரு குறிப்பான் ஒரே ஒரு குறியீட்டைப் பெறுவதற்கான வழியாகச் செயல்படுகிறது. குறியீட்டுக் குறியில் ஒரு குறிப்பான் ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்பீடுகளைத் தருவதாக உள்ளது. தமிழ் மொழியைப் பொறுத்த வரையில், குறியீட்டுக் குறியின் பயன்பாட்டு மரபு, தொல்காப்பியத்திலிருந்தே தோற்றம் பெற்றுள்ளது. தொல்காப்பியர் குறிப்பிடும் அடையாளப் பூக்கள் அனைத்துமே குறியீட்டுக் குறிகள்தாம். ” ஒரு குறிப்பீடு வேறொரு குறிப்பீட்டுக்குப் பதிலாக நிற்பது தான் குறியீட்டுக் குறியிலாகுமென ஹாக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுவார். குறியீட்டுக் குறியில் ஒரு குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையிலான உறவு இடுகுறித் தன்மை வாய்ந்தது. உதாரணமாக பின்வரும் சங்க பாடலில் குறியீட்டுக்குறியின் பயன்பாட்டை அறியாலாம். பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை வண்டுவாய் திறக்கும் தந்துறை ஊரன்” ( குறுந்: 370) ஆம்பல் , வண்டு என்பன இரு குறிப்பான்கள். அதன் குறிப்பீடுகள் “ ஒரு வகையான மலர்”, “ஒரு வகையான உயிரி” என்பனவாகும் . ஆனால் அடுத்த நிலையில் “ பரத்தை” “ தலைவன்” என்னும் குறிப்பீடுகள் கிடைக்கின்றன.இதில் குறிப்பானும், குறிப்பீடும் இணைந்து நேரடிப் பொருண்மை அளிக்காமல் வேறொரு பொருண்மையை அளிப்பதாக உள்ளது.