குறுங்கலி என்னும் துறையில் அமைந்த பாடல்கள் எனப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகன் தன் மனைவி கண்ணகி என்பாளைத் துறந்து வேறொருத்தியோடு வாழ்ந்துவந்தான். இது தகாது என இடித்துரைத்து மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தும் பாடல்கள் இவை. இந்தப் பாடல்கள் ‘தாபதநிலை’ என்னும் துறையின என்னும் குறிப்பும் குறுங்கலி என்பதனுடன் தரப்பட்டுள்ளது.[1]

கலி என்பது துள்ளும் ஓசை. பாடல்கள் கண்ணகி துள்ளும் மனநிலை இல்லாதிருத்தலைக் குறிக்க இத் துறைப் பெயரை வைத்திருக்கிறார்கள். இது பெருந்திணையில் வரும் துறைகளில் ஒன்று. தொல்காப்பியம் அகத்திணையில் ஒன்றாறாகப் பெருந்திணையைக் காட்டுகிறது. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண நூல்கள் பெருந்திணையைப் புறத்திணையோடு சேர்த்துள்ளன.

புறப்பொருள் வெண்பாமாலை பெருந்திணையை ஒருபாற் பெருந்திணை என்றும், இருபாற் பெருந்திணை என்றும் இரண்டு பிரிவுகளாக்கிக்கொண்டு சொல்லும்போது இருபாற் பெருந்திணையில் குறங்கலி என்னும் துறையைக் குறிப்பிடுகிறது. மனைவி விரும்பும்போது கணவன் வேறுபட்டிருக்கும் நிலையைக் கூறுவது குறுங்கலி எனக் குறிப்பிடுகிறது.[2]

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 143 முதல் 147
  2. நாறு இருங் கூந்தல் மகளிரை நயப்ப
    வேறுபடு வேட்கை வீயக் கூறின்று. கொளு 142

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்கலி&oldid=3317148" இலிருந்து மீள்விக்கப்பட்டது