குறும்பனை என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள இவ்வூர் சுமார் 2 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ளது. 8000இற்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர். இங்குள்ள மக்களின் முதன்மையான தொழில் மீன் பிடித்தலாகும்.

பொருளியல்

தொகு

மக்களில் பெரும்பாலோர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். பட்டதாரிகள் மின்பிடி தொழிலில் இறங்காமல் நகரங்களிலோ அயல்நாடுகளிலோ வேலையை எதிர்பார்க்கின்றனர். கற்ற மகளிர் முதன்மையான தொழிலாக கல்வித் துறையில் பணிபுரிகின்றனர்.

புவியியல்

தொகு

குறும்பனை கடற்கரை 2 கிமீ நீளம் கொண்டது. இது மாவட்ட அளவில் அழகான கடற்கரை ஆகும். இது மேற்கில் சிலுவையா பேராயத்தில் இருந்து தொடங்கி, கிழக்கில் பரியக்காலில் முடிகிறது. இது பரியக்கால் கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamilnadu Tourism: Kurumpanai Beach, Kanyakumari". 11 October 2017.
  2. "Tamilnadu Tourism: St. Ignatius Church, Kurumpanai, Kanyakumari". 11 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பனை&oldid=3862444" இலிருந்து மீள்விக்கப்பட்டது