குறும்பரப்பு வலையமைப்புகள்
குறும்பரப்பு வலையமைப்பு (Local Area Network) அல்லது அகக்கணினி வலையமைப்பு என்பது ஒரு வீடு, அல்லது ஒரு கல்லூரியின் சில கட்டிடங்கள் போன்று சிறு பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும்.
ஆரம்பத்தில் குறும்பரப்பு பிணையம் ஒரு மையக் கணினியையும் பிற dumb terminals கொண்டிருந்தது. இதன் நோக்கம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பயன்களுக்கு அல்லது வெவ்வேறு பயனர்களுக்கு சேவை வழங்குவதாகும்.
இவை பெரும்பாலும் ஈதர்நெட் தொழில்நுட்பத்தில் காவலிடாத முறுக்கான வயர்களூடாகவும் வைபை தொழில்நுட்பத்தூடாகவும் வடிவமைக்கப்பட்டன.
பின்னர் workstations ஒரு குறும்பரப்பாகப் பிணைக்கப்பட்டன. இதன் நோக்கம் பல கணினிகள் நினைவகம், அச்சியந்திரங்கள் போன்ற பொது வசதிகளை பகிர்ந்து கொள்வதும் கணினிகளுக்கிடையான தொடர்புகளை ஏற்படுத்துவதாகும். இங்கு வலையமைப்பு பாதுகாப்பாக பேணுவது முக்கியம்.
வரலாறு
தொகு1970களில் ஒரே இடத்தில் உள்ள கணினிகளை ஒன்றாக வேகமாக இணைக்கும் பொருட்டு முதலாவது வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் ஈதர்நெட் மற்றும் ஆர்க்நெட்- ARPANET(American Research Project Agancy - DoD USA மிகப்பிரபலமானவை.
CP/M மற்றும் டாஸ் இயங்குதளங்களில் வளர்ச்சியானது ஒரே இடத்தில் பல கணினிகள் முதல் பன்னூற்றுக்கணக்கான கணினிகள் வரை வைத்திருக்க வழிவகை செய்தது. வலையமைப்புக்களில் ஆரம்ப இலக்குக்களாக லேசர் அச்சியந்திரங்களைப் பகிருதல், கோப்புக்களை சேமிக்கும் இடங்களைப் பகிர்தல் ஆகியனவையே ஏனெனில் அக்காலகட்டத்தில் இவையிரண்டும் விலைமதிப்பானவையாக இருந்தது. 1983 இல் கணினிப் பண்டிதர்கள் கிரமமாக வரும் வருடத்தை வலையமைப்பு வருடமாகப் பிரகடனப்படுத்தினர்.
எனினும் உண்மையில் பௌதீக லேயர்(Physical Layer) மற்றும் அதை அணுகுவதற்கான வழிமுறைகள் ஒத்திசைவாக இல்லாதிருந்ததால் எவ்வாறு கணினி வழங்களை வினைத்திறனாகப் பகிர்வது என்பதில் மயக்கங்கள் ஏற்படுத்துத் தயக்கங்களை உண்டுபண்ணியது. பொதுவாக அக்காலத்தில் வலையமைப்புக் அட்டைகளைத் (நெட்வேர்க் காட்) தயாரித்தோர் தமக்கெற்றேற்றமாதிரி தாம் உருவாக்கிய வலையமைப்பு இயங்குதளம், நெட்வேர்க் காட், அதை அணுகுவதற்கான முறை, கேபிள் முறைகள் போன்ற இருந்தன. இதற்கு ஓர் தீர்வாக நாவல் நெட்வேர் வெளிவந்து வெற்றிகண்டது. இது 40 இற்கும் மேற்பட்ட கணினி வலையமைப்பு அட்டைகள்/மற்றும் கேபிள் முறைகளை ஆதரித்து இதன் போட்டியாளர்களை விட மேம்பட்டதாக விளங்கியது. நாவல் நெட்வேர் கணினி வலையமைப்பு வர்தகத்தை 1983 இன் ஆரம்பத்தில் இருந்து 1990 களில் மைக்ரோசாப்டின் வினைத்திறனான வின்டோஸ் என்டி சேவர் மற்றும் விண்டோஸ் பொ வேர்க்குறூப்ஸ் போன்றவை வெளிவரும்வரை ஆதிக்கம் செலுத்தியது.
இக்காலகட்டத்தில் யுனிக்ஸ் இயங்குதளத்தைத் தயாரித்து விநியோகித்த சண் மைக்ரோ சிஸ்டம், ஹூயூவ்லெட் பக்காட், சிலிக்கான் கிராபிக்ஸ், இண்டகிராப், நெக்ஸ்ட் மற்றும் அப்போலோ TCP/IP இல் அமைந்த வலையமைப்பைப் பாவித்தன. இத்தொழில்நுட்பமானது இணையத்திலும் லினக்ஸ் மற்றும் ஆப்பிள் மாக்ஓஎஸ் இயங்குதளங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதோடு நாவல் நெட்வேர் ஆரம்பத்தில் 5ஆம் பதிப்புவரை விரும்பிப் பாவித்த ஐபிஎஸ், ஆப்பிள்டோக், என்பிஎவ் போன்றவற்றையும் மாற்றீடு செய்துள்ளது.