குறைக் கடத்தி கதிர் ஏற்பளவுமானி
குறைக் கடத்தி கதிர் ஏற்பளவுமானி(Semiconductor dosimeter) என்பது இட்ரான்சுசிசுட்டர் (Transistor)-ல் பயன்படும் குறைகடத்தி படிகங்கள் (Crystals) ஆல்ஃபா கதிர்களையும் மற்றும் நிறைகூடிய அணுத்தகள்களையும் காணவும், அளவிடவும், பயன்படும் கருவியாகும்.
செயல்படும் முறை
தொகுமிகவும் தூய்மையானதும் மெல்லிதுமான சிலிக்கான் படிகத்தின் (Silicon) இரு பரப்பில் மின்கடத்தும் தங்கப் பூச்சு உள்ளது. இந்தத் தங்கப் பூச்சுடன் மின் இணைப்புக் கம்பிகளுடன் ஒன்று முதல் 20 வோல்ட்டு மின்அழுத்த வேறுபாடு இணைக்கப்பட்டு, பின் பெருக்கிக்கும் அளவிடு கருவிக்கும் இணைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு மின்னூட்டம் கொண்ட துகள் படிகத்தில் செல்ல நேர்ந்தால் தனித்த எலக்ட்ரான்களும் துளைகளும்(Holes) தோற்றுவிக்கப்படுகின்றன. இவை மேலும் பெருக்கியால் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் அளவிடு கருவியில் ஏற்படும் மாற்றம் அளவிடப்பட முடியும். அல்லது எண்கருவியில்(counters) காணப்படும் துடிப்புகள் எண்ணப்பட முடியும்.
வகைகள்
தொகு- சிலிக்கான் இருமுனைய ஏற்பளவுமானி கருவிகள் மற்றும்
- மாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம் ஏற்பளவுமானி என இருவகையான குறைக் கடத்தி கதிர் ஏற்பளவுமானிகள் தற்போது உள்ளன.
உசாத்துணை
தொகு- கதிரியக்க ஏற்பளவுமானிகள் (ஆங்கில மொழியில்)
- ஏற்பளவுமானிகள் (ஆங்கில மொழியில்)