குறைந்து செல்லும் இறுதிநிலை பயன்பாட்டு விதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒரு நுகர்வோர் ஒரு பண்டத்தை அல்லது ஒரு பொருளை தொடர்ந்து நுகர்வதால் அந்த பண்டத்தில் இருந்து கிடைக்கக்கூடிய இறுதிலை பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். எடுத்துக்காட்டாக பசியோடு இருக்கும் ஒருவர் பழம் ஒன்றை சாப்பிடுகிறார் என்றால் அவரது பசியானது சற்றுகுறையும். மேலும் அவர் இரண்டாவது பழத்தை தொடர்ந்து சாப்பிடுகிறார் என்றால் அதில் இருந்து கிடைக்கும் பயன்பாடானது சற்று குறைந்து இருக்கும். எப்படி என்றால் அந்தே நேரத்தில் அவரது பசியானது சற்று குறைந்திருக்கும், பசி குறையும் பொழுது அந்த பண்டத்தின் தேவையும் குறையும். அதனால் பண்டத்தின் தேவை குறையும்பொழுது இயல்பாக இறுதிநிலையானது தானாகவே குறைந்து விடும், இதுவே குறைந்து செல்லும் இறுதிநிலை பயன்பாட்டு விதி.
குறைந்து செல்லும் எல்லைப்பயனின் முக்கியத்துவம்
தொகு1. பொருளியலின் பல விதிகளுக்கு இறுதிநிலைப் பயன்பாட்டு விதி அடிப்படையானதாகும். தேவை விதி, இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் செயல்பாட்டினால் தோன்றியதாகும். ஒரு பண்டத்தை மேலும் மேலும் தொடர்ச்சியாக நுகரும் பொழுது அதன் ஒவ்வொரு அலகிலிருந்து கிடைக்கும் இறுதிநிலைப் பயன்பாடானது குறைந்து கொண்டே செல்லும். இது இறுதிநிலைப்பயன் பாட்டுவிதியின் செயல்பாட்டினால் தோன்றுவதாகும். பயன்பாடு குறைவதால் நுகர்வோர் குறைவான விலையையே கொடுக்க விரும்புகிறார்.
2. குறைந்து செல் இறுதி நிலைப்பயன்பாட்டு விதி பணத்திற்கும் பொருந்தும். ஏற்கனவே ஏராளமான பணத்தைப் பெற்றுள்ள செல்வந்தர் ஒருவர் மேலும் மேலும் வருமானமாகப் பணத்தை கூட்டிக் கொண்டே சென்றால் பணத்தின் இறுதிநிலைப் பயன்பாடு குறையும் ஆனால் பணத்தின் இறுதிநிலைப்பயன்பாடு மாறாது நிலையாக இருக்கும் என்று மார்ஷல் கருதுகிறார்.
3. இவ்விதி பணக்காரர்களுக்கு அதிக வரிவிதிக்க ஒரு ஆயுதமாக நிதி அமைச்சருக்கு உதவுகிறது.
4. இவ்விதி உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் அறியாமலேயே வழிகாட்டியாக செயல்படுகிறது. அவ்வப்போது தாங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களின் வடிவம் போன்றவற்றில் மாற்றங்களைச் செய்கின்றனர். இதனால் அவை புதுப்பண்டங்கள் போல காட்சி அளித்து நுகர்வோரைக் கவருகின்றன. இல்லையெனில் நுகர்வோர் பழைய பண்டத்தையே தாங்கள் நுகருவதாக கருதுவர். இதனால் இச்சூடிநநிலையில் இறுதிநிலைப்பயன்பாட்டு விதி நுகர்வோரின் மனதில்செயல்படுகிறது.