குறைவெப்ப மருத்துவம்
குறைவெப்ப மருத்துவம் அல்லது அறுவை மருத்துவம் (Cryotherapy or surgery) ) என்பது புற்றை உறையவைத்து நோயினைக் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் சிகிச்சைமுறை. முலைப்புற்று வந்த சில நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்கு மறுக்கும்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த வெப்ப மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகும் அவர்களிடம் நோய் அறிகுறி ஏதுமில்லை. மிகவும் குறைந்த வெப்பநிலையிலுள்ள வளிமத்தை சிறு ஊசிமூலம் புற்றுநோய் கண்ட திசுக்களைச் சுற்றி செலுத்தி மருத்துவம் செய்யப்பட்டது. இம்முறையில் நோயாளி எந்தவிதமான துன்பமும் அடைவதில்லை. மேலும் இம் முறை காப்பானதும் நல்ல பயனுள்ளதாகவும் உள்ளது. மார்பக இழப்பில்லாமலும் மருத்துவம் செய்யமுடியும்.