குலாம் பாரூக் அவான்
குலாம் பாரூக் அவான் (Ghulam Farooq Awan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஓரு கட்டுரையாளராகவும் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பாக்கித்தான் பிரதமரின் முன்னாள் ஆலோசகராகவும் இருந்தார்.[1] முன்னதாக இவர் பாக்கித்தான் நாட்டின் கூடுதல் தலைமை சட்ட அதிகாரியாகவும் பணியாற்றினார்.
குலாம் பாரூக் அவான் Ghulam Farooq Awan | |
---|---|
தாய்மொழியில் பெயர் | غلام فاروق اعوان |
பிறப்பு | பெப்ரவரி 10, 1961 ககூட்டா, பாக்கித்தான் |
தேசியம் | பாக்கித்தான்i |
கல்வி | முதுநிலை சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | பஞ்சாப் பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர், கட்டுரையாளர் |
அறியப்படுவது | பாக்கித்தான் பிரதமர் ஆலோசகர், கூடுதல் தலைமை சட்ட அதிகாரி |
அரசியல் வாழ்க்கை
தொகுகுலாம் பாரூக் அவான் 1991 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியில் சேர்ந்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் பாக்கித்தான் நாட்டின் கூடுதல் தலைமை சட்ட அதிகாரியாகப் பதவியேற்றார். பின்னர் இதே ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் சர்தாரியால் பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[2][3]
பாக்கித்தான் மக்கள் கட்சியில் இருந்து விலகி 2016 ஆம் ஆண்டில் பாக்கித்தான் தெக்ரீக்-இ-இன்சாப்பு கட்சியில் சேர்ந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Farooq Awan appointed as adviser to the PM of Pakistan". Rasoul News. April 16, 2011 இம் மூலத்தில் இருந்து March 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120321044608/http://www.rasoulnews.com/news/Details.asp?Index=15168&activestatecode=13. பார்த்த நாள்: August 10, 2011.
- ↑ "Asif Zardari appointed Farooq Awan as Adviser to PM". Pakistan Times. April 16, 2011 இம் மூலத்தில் இருந்து November 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103150634/http://pakistantimes.net/pt/detail.php?newsId=20794. பார்த்த நாள்: August 10, 2011.
- ↑ "List of Advisers to the Prime Minister of Pakistan". Ministry of Information and Broadcasting. Archived from the original on June 29, 2011. பார்க்கப்பட்ட நாள் August 10, 2011.