குளகச் செய்யுள்

'குளகச் செய்யுள்' என்பது பல பாடலாய் நின்று ஒரு வினையை அல்லது ஒரு பெயரையாவது கொண்டு முற்றுப் பெறும் செய்யுளாகும். குளகம் என்பது ஒரு பாடலில் பொருள் முடியாமல் அடுத்தடுத்து சென்று முடிவதாகும்.

சான்று:

பாடல் 1:

இருவிகற்ப நேரிசை வெண்பா

முன்புலகம் ஏழினையும் தாயதுவும் மூதுணர்வோர்

இன்புறக்கங் காநதியை ஈன்றதுவும் - நன்பரதன்

கண்டிருப்ப வைகியது கான்போ யதும்இரதம்

உண்டிருப்பார் உட்கொண்ட தும்.

பாடல் 2:

இருவிகற்ப நேரிசை வெண்பா

வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்

அந்தச் சிலையினைப்பெண் ஆக்கியதும் - செந்தமிழ்தேர்

நாவலன்பின் போந்ததுவும் நன்னீர்த் திருவரங்கக்

காவலவன் மாவலவன் கால்.

விளக்கம்: இங்கு தாயதுவும், ஈன்றதுவும், வைகியதும், போயதுவும், உட்கொண்டதுவும் என்று ஒரு செய்யுளில் பொருள் முடியாமல், மகவுஆக்கியதும், பெண்ணாக்கியதும், போந்ததுவும் மாவலவன் கால் என அடுத்த செய்யுளில் போய்ப் பொருள் முற்றுப் பெற்றதால் இது குளகமாயின. இது கால் என்ற பெயரைக் கொண்டு பொருள் முடிவைப் பெற்றதற்குச் சான்றாகும்.

உசாத்துணை

தொகு

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளகச்_செய்யுள்&oldid=2758591" இலிருந்து மீள்விக்கப்பட்டது