குளச்சல் துறைமுகம்

குளச்சல் துறைமுகம் தமிழ்நாட்டிலுள்ள முன்மொழியப்பட்ட துறைமுகங்களில் ஒன்றாகும்.[1]. தமிழ்நாடு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இத்துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று, கடல் மாலை திட்டத்தின் கீழ் ரூ 21,000 கோடி செலவில் நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக மாற்றும் முயற்சியை இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.[2].

குளச்சல் துறைமுகம்
குளச்சல் துறைமுகம்
பழைய குளச்சல் துறைமுகம்
Map
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும்
அமைவிடம்
நாடுஇந்தியா
அமைவிடம்குளச்சல்
ஆள்கூற்றுகள்8°17′N 77°24′E / 8.283°N 77.400°E / 8.283; 77.400
குளச்சல் is located in இந்தியா
குளச்சல்
குளச்சல்
குளச்சல் (இந்தியா)
விவரங்கள்
நிர்வகிப்பாளர்Tamil Nadu Maritime Board
புள்ளிவிவரங்கள்
வலைத்தளம்
[1]

வரலாறு

தொகு

இது ஒரு பழங்கால துறைமுக நகரம் வாஸ்கோட காமா ‘கோலாச்சி’ என்று அழைத்தார், கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் படைக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் படை வென்றது. இதன் நினைவாக நிறுவப்பட்ட வெற்றி தூண் இன்றளவும் குளச்சலில் உள்ளது. [3] [4]

குளச்சல் போர்

தொகு

குளச்சல் போரில் ஏற்பட்ட தோல்வியால் கேரள பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் சரியத் தொடங்கியது. திருவிதான்கூருடன் சமாதானமாக போக விரும்பிய டச்சுக் கம்பெனி 1743 மற்றும் 1753 ஆம் ஆண்டுகளில் திருவாங்கூர் மன்னருடன் வணிக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. குளச்சல் போரின் வெற்றியால் மார்த்தாண்ட வர்மாவின் செல்வாக்கு அதிகரித்ததுடன் தென் கேரளத்தில் அவர் வலிமையான மன்னராக உருவெடுப்பதற்கும் இந்த வெற்றி வழிவகுத்தது.

குளச்சல் போரின்போது திருவாங்கூர் படையில் சேர்க்கப்பட்ட ஐரோப்பிய வீரர்களின் திறமையால் திருவாங்கூர் படை நவீனப்படுத்தப்பட்டு, பல குறுநில அரசுகளும் வீழ்த்தப்பட்டன. கன்னியாகுமரி டச்சு முகாமிலிருந்து விலகி திருவாங்கூர் படையில் இணைந்துகொண்ட யுஸ்டாச் டி லெனாய் என்ற ஐரோப்பிய வீரர் மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, திருவாங்கூரின் படைத் தளபதியாக பணியாற்றி பல போர் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. [5]

குளச்சல் இயற்கை துறைமுகம்

தொகு

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோயிலிலிருந்து 19 கி.மீ தூரத்தில் உள்ள குளச்சல் இதைத மத்திய அரசு துறைமுகம் முன்மொழியப்பட்டது. முன்மொழியப்பட்ட குளச்சல் சர்வதேச துறைமுகம் சர்வதேச கப்பல் பாதையிலிருந்து நான்கு கடல் மைல் தொலைவில் உள்ளது. பெரிய கப்பல்களுக்கு சுமார் 18 மீட்டர் நீர் ஆழம் தேவை. குளச்சல் துறைமுகம் ஏற்கனவே 20 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு இயற்கையான துறைமுகமாகும்.

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.tnmaritime.com/goverment_ports.php
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-06.
  3. http://www.maalaimalar.com/2011/07/30171018/colachal-area-service-plan-hol.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. https://archive.org/stream/travancorestate00aiyagoog#page/n476/mode/1up
  5. எஸ். ஆன்றனி கிளாரட், Ibid, P – 42.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளச்சல்_துறைமுகம்&oldid=3707841" இலிருந்து மீள்விக்கப்பட்டது