குளமுற்றம்
குளமுற்றம் என்பது ஓர் ஊர்.
- நலங்கிள்ளி,
- நெடுங்கிள்ளி,
- பெருங்கோக் கிள்ளி(கொப்பெருஞ்சோழன்)
- பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்டவன்
- பெருநற்கிள்ளி, போர்வைக்கோ
- பெருநற்கிள்ளி, முடித்தலைக்கோ
- பெருநற்கிள்ளி, வேல்பஃறடக்கை
ஆகிய சோழ வேந்தர்கள் கிள்ளி என்னும் பெயருடன் விளங்கினர்.
கிள்ளிவளவன் என்னும் பெயருடன் இருவர் உள்ளனர்.
ஒருவன் குராப்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சியவன்.
மற்றொருவன் குளமுற்றம் என்னுமிடத்தில் துஞ்சியவன்.
குராப்பள்ளி என்னுமிடத்தில் துஞ்சிய மற்றொரு சோழன் பெருந்திருமாவளவன்.
மேலே கண்ட 7 கிள்ளி அரசர்களில் எந்தக் கிள்ளியின் மகன் எந்தக் கிள்ளிவளவன் எனத் தெளிவது கடினம்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் சங்ககாலச் சேர அரசர்களின் தலைநகரான வஞ்சிக்கு (கொடுங்கோளூருக்கு) அருகில் கூலிமுற்றம் என்னும் ஊர் உள்ளது. இந்தக் கிள்ளிவளவன் சேரநாடு சென்றபோது அங்கு மாண்டானா என எண்ணிப் பார்க்கலாம்.