குளவி (பூச்சி)

குளவி
Vespula germanica
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
பூச்சி
வரிசை:

குளவி என்பது ஹிம்னோட்பெரா வகுப்பை சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும்.இவை தேனீயுமல்லாத எறும்புமல்லாத அபோக்ரிட்டா எனும் துணை வரிசையை சேர்ந்தவை.இவை சில வேளைகளில் கூட்டமாகவும் சிலவேளைகளில் தனியாகவும் வாழ்பவை. குளவிகள் கவர்ச்சியான வண்ணங்களில் இருக்கின்றன. இளம் மஞ்சள், அடர் பழுப்பு, மெட்டலிக் புளூ, ஆழ்சிவப்பு, கறுப்பு மற்றும் வரி வடிங்களிலும் உள்ளன. இவற்றிக்கு தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகள் பிரிக்கப்பட்டாலும் மற்ற பூச்சிகளைப் போல் இல்லாமல் மார்பையும், வயிற்றையும் இணைக்க ஒரு மெல்லிய இடுப்பு இருக்கிறது. உறுதியான புறத்தோல் உள்ளது. உணவுகளை அரைக்க வலிய தாடைகளுடன் கூடிய வாய், பல கூட்டுக் கண்கள், இரண்டு ஜோடி இறக்கைகள், மூன்று ஜோடி கால்களும் உள்ளன. 12 முதல் 13வரை உணர்கொம்புகள் உள்ளன. இதன் வால் முனைப்பகுதிகளில் பெண்குளவிகளுக்கு விஷக்கொடுக்குகள் உண்டு. இதுவரை கண்டறியப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளவி இனங்களில் சுமார் 9000 ரகங்கள் தனித்து வாழக்கூடியன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளவி_(பூச்சி)&oldid=2619024" இலிருந்து மீள்விக்கப்பட்டது