குளிர்களி (ஐஸ்கிரீம்) அல்லது பனிக்கூழ் என்பது பால், கிறீம் போன்ற பாற் பொருட்கள் மற்றும் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ஆகியன கலந்து தயாரிக்கப்படும் குளிரூட்டப்பட்ட சிற்றுண்டியாகும். இக்கலவை குளிரூட்டப்படும்போது பனிக் கட்டிகள் உருவாவதைத் தடுக்க மெதுவாகக் கலக்கப்படும். பாற்பொருட்கள் இன்றிச் சோயாப் பால் போன்றவற்றைப் பயன்படுத்தியும் குளிர்களி தயாரிக்கப்படுகிறது. குளிர்களி வனிலா, சொக்லேற், ஸ்ரோபரி போன்ற சுவைத் தன்மைகளுடன் தயாரிக்கப்படுகிறது.

குளிர்களி
குளிர்களிகள்
மாற்றுப் பெயர்கள்பனிக்கூழ், ஐஸ் கிறீம்
முக்கிய சேர்பொருட்கள்பால்/கிரீம், சர்க்கரை
வேறுபாடுகள்ஸ்ட்ராபெரி, சோக்லேட், வெண்ணிலா, முதலியன
கூம்புக்குள் குளிர்களி
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்களி&oldid=2927789" இருந்து மீள்விக்கப்பட்டது