குளிர்சாதனப் பெட்டி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உணவையும் மருந்தையும் குளிர்ப்படுத்தி பாதுகாக்கும் இயந்திரம் குளிர்சாதனப் பெட்டி (Refrigerator) ஆகும். இது வெப்பம் கடாத்தப்படா ஒரு பெட்டியையும், உள்ளே இருந்து வெப்பத்தை வெளியே கொண்டு சென்று பொருட்களை குளிர்மைப்படுத்த ஒரு ஒழுங்குமுறையையும் கொண்டிருக்கிறது. இது மின்சக்தியில் இயங்கும் ஒர் இயந்திரம்.


உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும் இந்த இயந்திரம் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் அவற்றை இவ்வாறு பாதுகாத்து, அவை உணவுப் அருகிக் கிடைக்கும் காலத்தில் பயன்படுத்த உதவுகிறது. உணவுகள் அதிகமாக கிடைக்கும் இடங்களில் இருந்து வேற்று இடங்களுக்கு எடுத்து செல்லவும் இது உதவுகின்றது.