குளிர் தொழில்நுட்பம்

குளிரித் தொழில் நுட்பம் தொகு

  • குளிரியல் என்னும் சொல் உறையும் குளிர் என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானதாகும்.
  • இயற்பியலில் குளிரியல் என்பது மிகக்குறைந்த வெப்பநிலையை உருவாக்குதலும் (123மு க்கும் குறைவாக) அவ்வெப்பநிலையில் பொருள்களின் செயல்பாடுகளை அறிவதுமாகும். மிகக்குறைந்த வெப்ப நிலையிலுள்ள பொருள்களைப் பற்றிக் கற்றறிபவர் குளிரியலாளர் ஆவார்.
  • குளிரியலில் கெல்வின் வெப்பநிலை அளவீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
  • திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் போன்றவை பல்வகைக் குளிரி பயன்பாடுகளில் முக்கியமானதாகும்.
  • விதிகளின்படி நாடுகளிடையே பெற இயலுவதும், குளிரித் தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுவதும் திரவ நைட்ரஜன் ஆகும்.
  • திரவ ஹீலியம் மிகக்குறைந்த வெப்பநிலையைப் பெறப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 6 அடி உயரமும் 3 அடி விட்டமும் கொண்ட திவார் குடுவைகளில் இத்திரவங்கள் வைக்கப்படுகின்றன.
  • இரண்டாம் உலகப்போரின் போது குளிரியல் துறை வளர்ச்சியடைந்தது.
  • அறிவியலாளர்கள் மிகவும் குளிரூட்டப்பட்ட உலோகங்களின் உறுதித்தன்மை அதிகரிப்பதைக் கண்டறிந்தனர். இது குளிரி வலுப்படுத்துதல் எனப்படும்.
  • எட்புஸ் என்பவரால் 1966 ஆம் ஆண்டு வாணிகமுறையில் செயல்படும் குளிரித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு உலகின் பழைமையான குளிரி நிறுவனமாக மாறியது.
  • திரவ நைட்ரஜன் போன்ற குளிரிகள், குளிர்விக்கும் மற்றும் உறையச் செய்யும் பயன்பாடுகளில் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளிர்_தொழில்நுட்பம்&oldid=3179155" இலிருந்து மீள்விக்கப்பட்டது