குளூசிதர்
குளூசிதர் (Glucydur) என்பது வெப்ப விரிவுக் கெழு குறைவாகக் கொண்டுள்ள ஒரு கலப்புலோகத்தின் வர்த்தகப் பெயர் ஆகும். இக்கலப்புலோகம் இயங்கு கடிகாரங்களின் துடிப்பியக்கச் சக்கரம் உள்ளிட்ட பிற பகுதிப்பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
பெரிலியம், தாமிரம், இரும்பு போன்ற உலோகங்களைக் கலந்து குளூசிதர் கலப்புலோகம் உருவாக்கப்படுகிறது, பெரிலிய வெண்கலம் என்ற பெயராலும் இக்கலப்புலோகம் அழைக்கப்படுகிறது. குறை வெப்ப விரிவுக் கெழுவுடன் கூடுதலாக 400 பிரைனெல் கடினத்தன்மை அளவு, காந்தமாகாத் தன்மை, மீள் உருவாக்கத் தடை போன்ற சிறப்புப் பண்புகளும் இதன் உயர் பரிமான நிலைப்புத் தன்மைக்கு காரணங்களாகின்றன. அரிமானத்திற்கும் தடை ஏற்படுத்தும் கலப்புலோகமாக குளூசிதர் பயன்படுகிறது. குளூசிதர் தயாரிக்கப்பட்ட அதே காலத்தில் நிவாரோக்சு என்ற மற்றொரு காந்தமாகா பொருளும் தயாரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- Odets, Walt (2007), The Balance Wheel of a Watch, The Horologium,TimeZone.com, archived from the original on 2007-07-06, பார்க்கப்பட்ட நாள் 2007-06-15. Technical article on construction of watch balance wheels, on watch repair website.