டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு (Tiberius Claudius Caesar Augustus Germanicus அல்லது முதலாம் குளோடியசு (ஆகஸ்ட் 1, கிமு 10அக்டோபர் 13, கிபி 54) என்பவன் நான்காவது ரோமப் பேரரசன் ஆவான். இவன் ஜனவரி 24, கிபி 41 முதல் இறக்கும் வரை கிபி 54 வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய பிரான்சில் பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.[1][2][3]

குளோடியசு
Claudius
ரோமப் பேரரசன்
ஆட்சிஜனவரி 24 41அக்டோபர் 13 54
முன்னிருந்தவர்கலிகூலா
பின்வந்தவர்நீரோ
மனைவிகள்
  • அமீலியா, லிவியா
  • 1) புளோட்டியா, கிபி 9–24
  • 2) ஏலியா, கிபி 28–31
  • 3) மெசலீனா, கிபி 38–48
  • 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
முழுப்பெயர்
டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து கிபி 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
அரச குலம்ஜூலியோ-குளோடிய வம்சம்
தந்தைநீரோ குளோடியசு ட்ரூசசு
தாய்அண்டோனியா
அடக்கம்ஆகுஸ்டசின் அடக்கசாலை

அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. பிரித்தானியாவைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cassius Dio, 60, 2; Suhr 1955 suggests that this must refer to before Claudius came to power.
  2. Josephus, Antiquitates Iudiacae XIX. Cassius Dio, Historia Romana, 60 1.3
  3. Josephus Bellum Judaicum II, 204–233.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோடியசு&oldid=3893570" இலிருந்து மீள்விக்கப்பட்டது