குழந்தைகளுக்கான கண் புரை நோய்

குழந்தைகளுக்கான கண் புரை நோய் (Childhood cataract), கண்ணில் உள்ள விழியில் வெள்ளை நிறப் படிமம் படிவதே கண்புரை என்பவர். பொதுவாக ஒளியை அனுமதிக்கும் விழித் திரை கண்புரையால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒளியை அனுமதிக்காது. இதன் விளைவாகப் பார்வை மங்கலாகத் தெரியும். கண்புரையானது ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ வரலாம். பெரியவர்களை கண்புரை பொதுவாக பாதித்தாலும் குழந்தைகளையும் சிறுவர்களையும் தாக்கும் அபாயமும் உள்ளது. குழந்தைகளின் கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், அவர்களுக்கு கண்புரை ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடியாகச் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். சிகிச்சையைத் தாமதப்படுத்தினால் சோம்பேறி கண் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.[1]

வகைகள்

தொகு

குழந்தைகளுக்கான கண் புரை நோயில் இருவகை கண்புரைகள் உள்ளன. பிறவிக் கண்புரை மற்றும் இளம் வயதில் ஏற்படும் கண்புரை. பிறவிக் கண்புரை என்பது பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும்போதே உள்ள கண்புரை. இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது சிறுகுழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படுவது.

காரணங்கள்

தொகு

குழந்தைகளுக்கு கண்புரை ஏற்படுவதற்கான சரியான காரணங்களை இன்னும் கண்டறிய முடியவில்லை. பிறவிக் கண்புரை தாக்குவதற்கு மரபணுச் சிக்கல்கள் காரணமாக உள்ளது. கருவுற்ற காலத்தில் தாய்க்கு ஏற்பட்ட தொற்று நோய்களும் காரணமாக அமைகின்றன.

இளம் வயதில் ஏற்படும் கண்புரை என்பது கண்ணில் அடிபடுதல், ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்று, பாலில் உள்ள சர்க்கரை உடலில் கலக்காததால் ஏற்படும் குறைபாடு மற்றும் நீரிழிவு போன்ற காரணங்களால் ஏற்படும்.

மேற்கோள்கள்

தொகு

.