குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள் (Children's song) என்பவை குழந்தைக்குத் தாய், பாட்டி, தாத்தா, சொல்லிக் கொடுக்க, குழந்தைகள் அப்பாடலைதத் திரும்பி பாடுவார்கள். குழந்தைகளுக்கு நாவசைத்து, கையசைத்து, உடலை ஆட்டி, சொல்லிக் கொடுப்பதால், உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியும் ஏற்படுகிறது. முதலில் அகரத்தைச் சொல்லிக் கொடுக்கப் பாடலையே பாடினார்கள். பாடல்கள் எளிமையாகப் பிள்ளைகளின் மனதில் படிந்து சிறந்த இடத்தினைப் பெற்று விடுகின்றன.

            “அம்மா இங்கே வாவா
                ஆசை முத்தம் தாதா
            இலையில் சோறு போட்டு
                ஈயைத் தூர ஓட்டு
            உன்னைப் போன்ற நல்லார்
                ஊரில் யாவர் உள்ளார்
            என்னால் உனக்குத் தொல்லை
                ஏதும் இங்கு இல்லை
          ஐயமின்றிச் சொல்வேன்
                ஒற்றுமை என்றும் பலமாம்
          ஓதும் செயலே நலமாம்
                ஓளவை சொன்ன மொழியாம்
          அஃதே எனக்கு வழியாம் “
                                        குழந்தைப் பாடல்- பாடநூல்

          “அணில் கதையைச் சொல்லுமுன்
           ஆண்ட ராமர் காலத்தில்
           இடர்புரிந்த இராவணன்
           ஈசன் இலங்கைக்காகவே
           உப்புக் கடலைத் தாண்டியே
           ஊக்கமாய் மணல் வாரியே
           எங்கும் நிறைந்துப் போயின
           ஏக. பலத்த இராமனும்
           ஐ என்ற அணில் பிள்ளைக்கு
           ஒப்பமான கோடுகள்
           ஓடும் கோடுகள் அமைத்தன
           ஔ என்ற அணில் பிள்ளைக்கு”
                                           நாராயணசாமி, புரசைவாக்கம்.

என்ற இரு பாடல்களையும் குழந்தைகளுக்காகபத் தாய் சொல்லிக் கொடுக்க, பின்னால் குழந்தைகள் அப் பாடல்களைப் படுகின்றனர். இப்பாடல்களினால், நீதிக் கருதுகளைக் குழந்தைகள் புரிந்து கொள்ள முடிகிறது. உடற்பயிற்சிப் பாடல்: (விளையாட்டு)

ஒரு விரலை அசைத்து “ஒரு விரல் ஆடிடுதே” என்ற பாடலைப் பாடி, உடலுறுப்புகளை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

             
               “ஒரு விரல் ஆடிடுதே”
               அதை நிறுத்தப் பார்த்தேன்
               இப்போ மறு விரல் ஆடிடுதே
ஒரு விரல் மறு விரல் இரு விரல் ஆடிடுதே
அதை நிறுத்தப் பார்த்தேன்
இப்போ ஒரு கை ஆடிடுதே
அதை நிறுத்தப் பார்த்தேன்
               ஒரு விரல், மறு விரல், ஒரு கை ஆடிடுதே
அதை நிறுத்தப் பார்த்தேன்
இப்போ மறு கை ஆடிடுதே
               நடுவிரல்,மருவிரல்,ஒருகை, மறு கை ஆடிடுதே
               ஒரு விரல், மறு விரல், ஒரு கை, மறு கை ஆடிடுதே
அதை நிறுத்தப் பார்த்தேன்
இப்போ ஒரு கால் ஆடிடுதே
               ஒரு விரல், மறு விரல், ஒரு கை, இரு கை, ஒரு கால் ஆடிடுதே
               அதை நிறுத்தப் பார்த்தேன்
மறு கால் ஆடிடுதே
ஒரு விரல், மறு விரல், ஒரு கை, மறு கை,
               ஒரு கால், மறு கால் ஆடிடுதே
               அதை நிறுத்தப் பார்த்தேன்
               தலையே ஆடிடுதே
               ஒரு விரல், மறு விரல், ஒரு கை, மறு கை,
               ஒரு கால், மறு கால், தலையே ஆடிடுதே
               அதை நிறுத்தப் பார்த்தேன்
               உடம்பே ஆடிடுதே
               ஒரு விரல், மறு விரல், ஒரு கை, மறு கை,
               ஒரு கால், மறு கால், தலையே, உடம்பே ஆடிடுதே”
                                                ஏகம்பராம், செங்கற்பட்டு


               ஒவ்வொரு விரலையும் அசைத்து,

              “சோறு சோறு என்குதாம் (சுண்டுவிரல்)
               சொற்றுக்கென்ன செய்யலாம் (மோதிர விரல்)
               கடன் வாங்கித் தின்னலாம் (நடுவிரல்)
               கடன் எப்படி கட்டலாம் (ஆள்காட்டி விரல்)
               பிள்ளத்திருந்தால் கட்டிக்கலாம் (பெருவிரல்)

என்று பாடி மகிழ்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  • நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்),

ஜோதி புக் செண்டர், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தைப்_பாடல்கள்&oldid=3516181" இலிருந்து மீள்விக்கப்பட்டது