குழற்றத்தனார்

குழற்றத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தத்தனார் என்பது இவர் பெயர். குழலிசையால் இவர் மக்களைக் கவர்ந்ததால் இவரைக் குழல் தத்தனார் என்றனர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை 242 எண் கொண்ட பாடல்.

குறுந்தொகை 242 சொல்லும் செய்தி தொகு

  • முல்லைத்திணை

திருமணத்துக்குப் பின்னர் கணவனும் மனைவியுமாக வாழும் வாழ்க்கையைக் கற்பு வாழ்க்கை என்கின்றனர். தான் வளர்த்த மகள் கணவனோடு இனிதாக வாழும் வாழ்க்கையைக் கண்டுவந்த செவிலி அம் மகளைப் பெற்ற தாயிடல் அவள் வாழும் பாங்கை எடுத்துக் கூறுகிறாள்.

அவள் சிற்றூரில் வாழ்கிறாள். அங்குக் காட்டுக்கோழியின் சேவல் தூறலுக்காகப் புதருக்கு அடியில் ஒதுங்கியது. தூறல் நின்ற பின்னர் புதரில் இருந்த நீர்த் திவலைகள் அதன் மேல் விழுந்தன. உடனே அது தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டது. அப்போது அதன்மேல் இருந்த நீர்த்திவலைகள் சிதறின. இப்படிப்பட்ட சிற்றூரில் அவள் வாழ்கிறாள்.

அவளது கணவன் அந்நாட்டு வேந்தன் அனுப்பிவைத்த வெளியூர்ப் பணிமேற் சென்றுள்ளான். அவள் அவனுடன் அவனது தேரில் அப்போது செல்ல முடியவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழற்றத்தனார்&oldid=2717995" இலிருந்து மீள்விக்கப்பட்டது