குழாய்த்தொகுதி
குழாய்த்தொகுதி (Manifold) என்பது அகலமான (அ) பெரிய குழாய் அல்லது கால்வாய் போன்ற தோற்றமைப்பு ஆகும். இதனுள்ளே சிறிய குழாய்கள் அல்லது கால்வாய் பொருத்தப்படும்.[1]
இது திரவ/வாயுக்களின் ஓட்டத்தினை கட்டுப்படுத்தவும், திரவம் மற்றும் வாயுக்கள் பாயும் திசையை மாற்றிவிடவும் பயன்படுகிறது.
பொறியியல் துறையில் குழாய்தொகுதியின் வகைகள்:
- வெளியேற்றும் குழாய்த்தொகுதி (Exhaust manifold) என்பது வாகன இயந்திரத்திலுள்ள பல்வேறு கலனிலிருந்து (Cylinder) வெளியேறும் வாயுக்களை ஒரே குழாய் வழியே அனுப்பும் பகுதி ஆகும்.
- நீரழுத்த குழாய்த்தொகுதி (Hydraulic manifold) என்பது நீரழுத்த இயந்திரத்தின் உள்ளே செல்லும் திரவங்களை கட்டுப்படுத்துகிறது. இது மேலும் இயக்கிக்கும் (Actuator), எக்கிக்கும் (Pump) இடையே பாயும் சக்தியை கட்டுப்படுத்துகிறது.
- இன்லெட் குழாய்த்தொகுதி (Inlet manifold) என்பது இயந்திரத்தில் கலனுக்குள்ளே செல்லும் காற்றினையும், எரிபொருளையும் கலக்கும் பகுதியாக உள்ளது.
- குழாய்த்தொகுதி (ஸ்குபா) என்பது ஸ்குபா இயந்திரத்தில் இரண்டு மூன்று நீர்முழ்கி கலனை ஒன்றாக கலக்க பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Scott, John S. (1992). Dictionary Of Civil Engineering. Springer. p. 269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780412984211.