குழியடிச்சான் (நெல்)
குழியடிச்சான் அல்லது குழி வெடித்தான் (Kuzhiyadichan) பாரம்பரிய நெல் வகைகளில் வறட்சிக்கு அஞ்சாத இரகமாக அறியப்பட்ட இது, கடும் வறட்சியையும் தாங்கி வளர்ந்து மகசூல் தரக்கூடிய நெல் இரகமாகும். மழை, மற்றும் ஆழ்குழாய் கிணற்றை நம்பி சாகுபடி செய்தும், மற்றும் தண்ணீர் இன்றியும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து மகசூல் தரும் நெல் இரகமாகும். ஐப்பசி மாதத்தில் (அக்டோபர்) நேரடி விதைப்புக்கு ஏற்ற நெல் வகையான இது, பயிர் நன்கு வளர்ந்து தை (சனவரி) மாதம் அறுவடைக்கு வந்துவிடக்கூடியது. முளைப்புக்கு பின்னர் ஒரு மழையில் அறுவடைக்கு வரும் திறன்கொண்டது.[1]
குழியடிச்சான் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
105 - 110 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1500 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா[1][2] |
பெயர் மரபு
தொகுகுழிநீரைக் கொண்டு துளிர்விட்டுத் தூர் (நெற்கதிர்) வெடிப்பதால், இந்நேல்லுக்கு, குளிகுளிச்சான் என்றொரு பெயரும் உண்டு. 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்நெல் இரகம், நான்கடி உயரம்வரை வளரும். பொன் நிறமான இந்த நெல் வகை, சிகப்பு அரிசியுடனான, மோட்டா (தடித்த) அரிசி முட்டை வடிவத்தில் இருக்கும்.[1]
சாகுபடி முறை
தொகுஇவ்வகை நெல்லை, நடவு செய்யும் முன்பாக தொழு உரம், பசுந்தாள் உரச்செடிகளான காவாலை, தக்கைப் பூண்டு (Sesbania), சஸ்பேனியா, டேஞ்சா போன்றவற்றை நிலத்தில் இட்டு உழவு செய்யலாம். இவ்வாறு செய்தால் நிலத்தின் மண்வளம் கூடுவத நுண்ணுயிர்கள் பெருகி, ஏற்கெனவே, உள்ள ரசாயன தாக்கத்தை மாற்ற முடியும். இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் இயல்புடைய இது, சாயும் தன்மையற்றது. விதை யாகவும், மற்றும் அரிசியாகவும் விற்பனை ஏற்ற இந்த நெல் ஏக்கருக்கு குறைந்தது 20 மூட்டைவரை மகசூல் கிடைக்ககூடியதாகும்.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "நம் நெல் அறிவோம்: வறட்சிக்கு அஞ்சாத குழியடிச்சான்". தி இந்து (தமிழ்) - மார்ச்சு 14, 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-12-23.
- ↑ Kuzhiyadichan