குழுவிவாதம்
குழுவிவாதம் என்பது மனித வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் குழுவிவாதங்கள் நடைபெறுவதை நாம் தினசரி வாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். குழுவிவாதத்தை அதன் நோக்கத்தின் அடிப்படையில் பல வகைகளாக பிரிக்கலாம். அதில் சில பின்வருமாறு -சந்திப்பு , கருத்தரங்கம் , குழுவிவாதம் , கருத்துப்பட்டறை மற்றும் பல. பல திறமைகளை வெளிக்கொண்டுவரும் குழுவிவாதத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
குழுவிவாதத்தின் முக்கிய நோக்கம்
தொகுகுழுவிவாதத்தில் மூன்று நபர்கள் வரை பங்கேற்கலாம். முதல் கட்டமாக நேரடி சந்திப்பு நிகழ்கிறது. குழுவிவாதத்தின் முக்கிய நோக்கமே முடிவுகள் எடுப்பது மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகும். நேர்முகத்தேர்வில் குழுவிவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் குழுவிவாதத்தின் மூலம் ஒரு நபரின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம். குழுவிவாதம் இறுதிகட்ட நேர்முகத்தேர்விற்கு செல்வதற்கு சுலபமான வழிவகுக்கிறது. முக்கியமாக மாணவர் சேர்க்கை மற்றும்துநலப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வரமாக இருக்கிறது.
குழுவிவாதத்தின் பலன்கள்
தொகுகுழுவிவாதத்தை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்திய பெருமை இந்திய ஆயுதப்படையையே சேரும். இந்திய ஆயுதப்படை குழுவிவாதத்தை அதிகாரிகள் சேர்க்கைக்காக பயன்படுத்தியது. அன்றைய தினத்திலிருந்து , குழுவிவாதம் மற்றபிற துறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் குழுவிவாதத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் சுலபம் மற்றும் மிகக்குறைந்த பணச்செலவு , நேரச்செலவுமாகும். புகழ்வாய்ந்த நிறுவன மேலாண்மை கல்லூரிகள் மாணவ ஃ மாணவியரை கல்லூரியில் படித்துவரும் சமயத்திலேயே குழுவிவாதத்தில் கலந்து கொள்வதற்கு பயிற்சி அளிக்கிறது. அதற்கு அடுத்த படியாகவே மாணவஃமாணவியரை நேர்முகத் தேர்விற்கு செல்கிறார்கள். குழுவிவாதத்தைப் பற்றிய கருத்து ஒன்றும் உலவி வருகிறது. அது என்னவெனில் குழுவிவாதம் நேர்முகத்தேர்விற்கு வரும் நபரை வடிகட்டிவிடும் ஒரு சாதனம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் குழுவிவாதத்தில் பங்குபெறுபவர் நேர்முகத் தேர்வின் இறுதிகட்டத்திற்கு செல்லலாம்.
குழுவிவாத செயல்முறை
தொகுகுழுவிவாதம் ஆட்களை தேர்ந்தெடுப்பதற்காக நேர்முகத் தேர்வில் புகுத்தப்பட்ட ஒரு பகுதி. குழுவிவாதத்தில் பங்கேற்பாளர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் எட்டு முதல் பத்து நபர்களாகப் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட தலைப்பில் 20 முதல் 30 நிமிடம் வரை விவாதிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. குழு விவாத உறுப்பினர்கள் இடவசதியைப் பொறுத்து வட்டமாகவே, சதுர வடிவிலோ அல்லது வடிவத்தில் அமர்ந்து கொள்வார்கள். தேர்வுக்குழு உறுப்பினர்களும் குழுவிவாத உறுப்பினர்களோடு அமர்ந்திருப்பார்கள். தொழில் நுட்பத்துறை வல்லுநர்கள் மற்றும் மனிதவள வல்லுநர்கள் தேர்வுக்குழுவில் இடம் வகிப்பார்கள். தேர்வுக்குழு உறுப்பினர்கள் குழுவிவாதத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கண்காணிக்கலாம். சில சமயங்களில் குழுவிவாதத்திற்கு முன்பே தலைப்புக் கொடுக்கப்பட்டு குழு உறுப்பினர்களுக்கிடையில் ஆலோசனை செய்யப்படும், ஒவ்வொரு உறுப்பினரும் அவரவர் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும். விவாதம் காலவரையறை மீறுதல் கூடாது. குழு விவாதத்தில் ஒவ்வொரு உறுப்பினரின் தகுதி, திறமை, பொறுப்புணர்ச்சி, தலைமைப் பண்புகள் இன்னும் பிற குணாதிசயங்கள் சோதிக்கப்படுகிறது.
குழுவிவாதத்தின் தேர்வு முறை
தொகுகுழுவிவாதத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கீழ்க்கண்ட மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.அறிவுத்திறன், கருத்துப் பரிமாற்றத்திறன், கூட்டு திறன் மற்றும் தலைமைப் பண்புகள், நாட்டு நடப்பு, பொது அறிவு மற்றும் பிரச்சனைகளைப் கையாளும் முறை அறிவுத்திறனில் சோதிக்கப்படுகிறது. கருத்துப்பரிமாற்றத்திறனில் பேச்சு, நடை, மொழி, உச்சரிப்பு, சொற்தேர்வுகள் ஆகியவை சோதிக்கப்படுகிறது. கூட்டுத் திறனில் மற்ற உறுப்பினர்களுடனான உறவு, பழகும் விதம் ஆகியவை சோதிக்கப்படுகிறது. தலைமைப் பண்புகளான காலத்தை சரியாக செலவிடுதல், முடிவுகள் எடுத்தல், பொறுப்பு ஆகியவை மிக முக்கியமான ஒன்று. குழுவிவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று மென்கலை. இதில் குழுவிவாதத்தில் பங்கு பெறுபவருடைய முக பாவனை, கை அசைவு, நிற்கும் விதம், கருத்தை பரிமாற்றம் செய்வதற்காக அவர் பயன்படுத்தும் சில சைகைகள் ஆகியவையும் கவனிக்கப்படுகிறது. ஆடைகளை தேர்வு செய்வதும் மிக அவசியம். நிறம், உடலமைப்பிற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்து அணியலாம்.
குழுவிவாதத்தின் வெற்றி, தோல்வி
தொகுகுழுவிவாதத்தில் தோல்வி அடைவதற்கான சில காரணங்கள் போதிய அறிவு இல்லாமை, கருத்துகளை வெளிப்படுத்துவதில் சிரமம், தன்னம்பிக்கை இல்லாமை ஆகியனவாகும். மிகுந்த ஈடுபாடுடன், முழு நம்பிக்கையுடன், தகுதியின் மேல் நம்பிக்கை வைத்து, திறமையை மனதில் கொண்டு, கருத்துகளை தெளிவுற வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
முடிவுரை
தொகுஇயல்பாகவே மனிதனுக்கு வெற்றியின் மேல் அதிக ஆசை உண்டு. குழுவிவாதமே நேர்முகத் தேர்விற்கு அடிப்படை. குழுவிவாதத்தில் வெற்றியடைந்துவிட்டால் நேர்முகத்தேர்வில் வெற்றி என்பது உறுதி.