குழு நடத்தை

குழு நடத்தை(Group Behavior) என்பது சமூகவியலில், பெரிய அல்லது சிறிய மக்கள் குழுக்களாக சேர்ந்து செயல்படும் சுழலைக் குறிப்பதாகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏராளமான மக்கள் குழுக்கள் ஒருமித்து இலக்கைஅடைய விழைவதற்கும், தனிநபர்கள் தனியாக விழைவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஒருபெரிய குழு (ஒரு கூட்டம் அல்லது கும்பல்) இதே போன்ற ஒன்று சேரும்போது குழு நடத்தை உதயமாகிறது. உதாரணத்திற்கு:- பேரணி அல்லது போராட்டங்களில் பங்கெடுப்பது, கிளர்ச்சி அல்லது யுத்தத்தில் பங்கெடுப்பது.

பெரிய குழு நடத்தை சிறப்பு வடிவங்கள் உள்ளன:

  • கூட்டம்- ஒரு குறிக்கோளுடன்(வெறி) சேர்ந்து கொண்ட குழு.
  • பார்வையாளர்கள் - போது சினிமா, நாடகம்,சினிமா திரைப்படம், கால்பந்து போட்டி, ஒரு கச்சேரி, போன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ககும் மக்கள் குழு.
  • பொது - இந்த வகைக்குழுக்கள் ஒரே பூகோள இடத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்றில்லை. இவர்கள் உலகம் முழுவதும் பரவி இதை செய்து கொண்டிருக்கலாம் உதாரணமாக- தொலைக்காட்சி முன் அமர்ந்து அதே அலைவரிசையைப் பார்த்துகொண்டிருக்கும் மக்கள் குழு.

எந்தவொரு ஒருங்கிணைப்பின்றி ஒரே விசயத்தை பலர் செய்வது வெகுஜன நடவடிக்கையாகும். இதை குழு நடத்தை என்று கொள்ளமுடியாது. அதுவே ஒருங்கிணைப்புடன் பலர் செய்தால் அது குழு நடவடிக்கையாகும்.

குழு நடத்தையில் உள்ள ஒரு சிறப்பு மந்தை புத்தி. அதாவது தன்னிடமில்லாத விசயங்களை குழுவிலுள்ள மற்றவர் மூலம் பெற்று விரும்பியதை செய்து முடிப்பதாகும்.

குழுக்கள் சேரக் காரணம் தொகு

பல்வேறு காரணங்களுக்காக மக்கள் குழுவாக இணைகிறார்கள். முக்கியமாக தனிப்பட்ட தேவைகளுக்காக மக்கள் இணைகிறார்கள். சிலசமயம் குழு உறுப்பினர்கள் தங்களை அறியாமல் பல தேவைகளைநிறைவேற்றிக்கொள்ள முடியும்.

  • தோழமை - சாதரணமாக ஒரு தோழமைக்காக இணைவது.
  • பிழைப்பு மற்றும் பாதுகாப்பு - ஒருவரலாற்று அல்லது பரிணாமபார்வையில் நம் முன்னோர்கள் தங்களைப்பாதுகாத்துக் கொள்ள மற்றும் வேட்டையாட குழுவாக இருந்தனர் என்பது இதற்கு சிறந்த உதாரணம்.
  • தொடர்பு மற்றும் மதிப்பு - பல்வேறுகுழுக்களில் உறுப்பினர் ஆவதன் மூலம் பல தொடர்புகளும் சமூகத்தில் மதிப்பும் கிடைப்பது.
  • அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு- குழுவின் மூலம் உருவாக்கப்படும் தலைமை பதவிகள் கொண்டு அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் அடைய முடிவது.
  • சாதனை - குழுக்கள் தனியாக செயல்படும் தனிநபர்களை விட அதிக திறனைகொண்டிருக்கின்றன.

நிறுவனங்கள் பொதுவாக வேலைதொடர்பான பணிகளைநிறைவேற்றும் பொருட்டு குழுக்கள்உருவாக்குகின்றன; அதன்மூலம ஒருவேலை குழுவின் ஒரு உறுப்பினருக்கு தானறியாமல் தற்செயலாக பல நன்மைகள் விளையும்.

குழு வளர்ச்சி நிலைகள் தொகு

குழுக்கள் உருவாகும் விதம் மாறுபட்டாலும் அதில் உள்ள சில ஒற்றுமைகளைக் கொண்டு குழு வளர்ச்சிநிலையை படிக்கலாம். வளர்ச்சி கோட்பாடுகள் பல்வேறு இருந்தாலும் Tuckman (1965) நிலை மாதிரி தான் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இதன்படி பின்வரும் ஐந்து நிலைகளில் ஒருகுழு உருவாகுகிறது.

  • உருவாக்கம்: இந்நிலையில் அனைவரும் தங்கள் தனிப்பட்ட பங்கு மற்றும் சக அணிஉறுப்பினர்கள் பிரமுகர்கள் தீர்மானிக்கமுயற்சிக்கப்படும். பெரும்பாலும்ஏற்றுக்கொள்ளக்கூடியதாக நடுநிலையுடன் அறியப்படாத விஷயங்களை தேடத் தொடங்கும்.
  • கலந்தாய்வு: நிலையான ஒற்றுமை சேர்ந்தப்பின் அவரவர் எல்லைகளை ஆராய தொடங்குகிறார். பிறகு கலந்தாய்வு ஏற்படுகிறது. குழப்பம், மோதல்கள் மற்றும் உற்சாகம் போன்ற நிகழ்வுகளை பொதுவானவை
  • சட்டமிடல்: குழுக்களில் கலந்தாய்வு முடிந்து குழப்பங்கள் முடிந்தப்பின், விதிகள் மற்றும் பங்குஉரிமைகள் தீர்மானிக்கபடுகிறது.
  • செயல்வடிவம்: குழு தனது இலக்கை நோக்கி செயல்படத் தொடங்கும். உறுப்பினர்களின் பங்களிப்பு உச்ச நிலையில் இருக்கும்.
  • ஒத்தி வைப்பு:சிறிய பணிகளுக்காக தொடங்கப்பட்ட அல்லது நிறைவு பெற்ற இலக்கு வந்தவுடன் குழுக்கள் பிரிவு நடைபெறும். அவரவர் அனுபவித்த நன்மைகளின் அடிப்படையில் உறுப்பினர்களின் மனநிலை வெவ்வேறாகயிருக்கும். இதுவே கடைசி நிலையாகும்.

குழுவகைகள் தொகு

செயல்படும் வேலைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகையில் பிரிக்கலாம்.

  • உற்பத்திக் குழுக்கள் - முதல் நிலை ஊழியர்களைக் கொண்ட குழு. சுயக்கட்டுப்பாடுடனும் உற்பத்தி செய்து இயங்கும்.
  • சேவை குழுக்கள் வானஊர்த்தி சேவை, தொலைதொடர்பு சேவை மையம், போன்ற வாடிக்கையாளர்களைப் பொறுத்து ஒரே வேலையை மறுமுறையும் செய்யும் குழுக்கள்
  • நிர்வாகக் குழுக்கள் நிர்வாகிகள் கொண்டு பல நிலை ஊழியர்களை மேர்பார்வையிடும் குழுக்கள்
  • திட்டக் குழுக்கள் பல நிலை உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரே குறிக்கோளுடன் செயல்படும் குழுக்கள்
  • செயல் மற்றும் இயக்கக் குழுக்கள் தனித் திறன் கொண்ட நபர்களால் இயக்கப்படும் குழுக்கள். பொதுவாக இசைக் குழுக்கள், மருத்துவ சிகிச்சிக் குழுக்கள் எனலாம்..
  • ஆலோசனைக் குழுக்கள் வெளியாட்கள் கொண்டு அறிவுரைகள் பெறும் பொருட்டு உருவான குழுக்கள்.

குழுவின் கட்டமைப்பு தொகு

குழு என்பது கும்பலாகயில்லாமல் கட்டமைக்கப்பட்ட தொகுதிகளை உடையது. பதவிகள், சட்டங்கள், மதிப்பு, எண்ணிக்கை, கலப்பு, கொள்கை என்று பல கட்டமைப்புகள் கொண்டது[1]. ஒவ்வொன்று குழுவின் நடத்தையை தீர்மானிக்கும்.

  • பதவி (Roles): தலைமைப் பதிவியோ அல்லது இதர பொறுப்புகளில் இருப்பவர்களின் நடத்தை குழு நடத்தையை பாதிக்கும். பொறுப்புணர்தல் (Role identity), பொறுப்பறிவு (Role Perception), பொறுப்பு எதிர்பார்ப்பு (Role Expectation), பொறுப்பு தெளிவு (Role conflict) போன்றவைகள் ஒவ்வொருக்கொருவர் மாறுபடும்
  • சட்டம் (Norms): குழுவிற்கென்றுயிருக்கும் தனியான சட்டதிட்டங்கள் மூலம் குழு நடத்தை பாதிக்கும். அதிகாரப்பூர்வ சட்டங்களும் அதிகாரப்பூர்வமற்ற சட்டங்களும் உண்டு.
  • மதிப்பு (Status): ஒரு குழுவிற்கு அல்லது குழுவினருக்கு மற்றவர்கள் அளிக்கப்படும் அந்தஸ்து. இந்த மதிப்பின் மூலம் குழுவின் நடத்தைகள் மாறுபடும்.
  • எண்ணிக்கை (size): குழுவினரின் என்னிக்கைகைப் பொறுத்து குழுவின் நடத்தை அமையும். ஆய்வின் படி சிறிய குழுக்கள் பெரிய குழுக்களைவிட விரைவாக செயல்படும். எண்ணிக்கை அதிகமாவதன் மூலம் சமூக சோம்பல் உருவாகவும் வாய்ப்புள்ளது.
  • கலப்பு (composition): ஒரு குழுவில் உள்ள உடபிரிவினர்களின் அடிப்படையில் குழு நடத்தை அமையும். பாலினம், வயது, கல்வி, முதலிய பாகுபாடுகளில் எவை அதிகமாக குழுவில் உள்ளதோ அவற்றின் நடத்தை அதிகளவு குழு நடத்தையாக வெளிப்படும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குழு_நடத்தை&oldid=3459519" இலிருந்து மீள்விக்கப்பட்டது