குழு மணம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களும் கூட்டாகத் திருமண பந்தத்தில் ஈடுபட்டிருப்பது குழு மண முறையாகும். இங்கே குழுவிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் மற்ற எல்லா ஆண்களுக்கும் மனைவியாகவும், அது போல ஒவ்வொரு ஆணும் மற்ற எல்லாப் பெண்களுக்கும் கணவனாகவும் ஆகிறார்கள். இம்முறை இக்காலத்தில் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகின்றது. இன்று பல கணவர் மண முறையைப் பின்பற்றும் சில சமுதாயங்களில் அம்முறையில் ஒரு விரிவாக்கமாக இந்தக் குழு மணமுறை இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்குழு மணமுறை நாடோடிகளாக இருக்கும் இனக்குழுக்களிடம் உள்ளது.