குழு மாற்ற வினை
குழு மாற்ற வினை (Group transfer reaction) என்பது கரிம வேதியியலில் சுற்று வளைய செயல்முறையைக் குறிக்கிறது. இவ்வினையில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களாக அணுக்கள் ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றப்படுகின்றன. மற்ற சுற்று வளைய வினை வகைகள் போல குழு மாற்ற வினைகளில் பை பிணைப்புகள் சிக்மா பிணைப்புகளாக மாற்றமடைவது அல்லது சிக்மா பிணைப்புகள் பை பிணைப்புகளாக மாறுவது போன்ற சிறப்பான மாற்றங்கள் எதுவும் நிகழ்வதில்லை. குழு மாற்ற வினைகள் அடிக்கடி நிகழாமல் அரிதாக எப்போதாவது நடைபெறுவதால் இவ்வினையை டையீல்சு-ஆல்டர் வளைய கூட்டுவினை வகையாகக் கருதும் வாய்ப்பு ஏற்படுவதுண்டு. எல்லா சுற்றுவளைய வினைகளைப் போலவே இவ்வினையும் வுட்வார்டு-ஆஃப்மான் விதிகளை பின்பற்றுகிறது [1]
குழு மாற்ற வினைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ஈன் வினை சுட்டிக்காட்டப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ J. Singh (2005). Photochemistry And Pericyclic Reactions. New Age International. pp. 135–139. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122416947.